மார்க்கெட்க்கு வந்த கதை
டொயோட்டாவின் இனோவா பிராண்டின் ஒரே எம்பீவி ஆகும், இது அதன் கம்ஃபர்ட் மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றது. இது டிரைவர்க்கு ஒரு நல்ல அனுபவத்தை தருகிறது. ஆனால் தற்போது இந்திய மார்க்கெட்டில் குறைந்த பட்ஜெட்டில் சிறிய எம்பீவி கார்ஸ் அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி XL6 மற்றும் கியா கேரன்ஸ் போன்ற எம்பீவிஸை வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். இந்த செக்மெண்ட்டில் இடம்பிடிக்கும் வகையில், ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா ருமியன்னை ரூ. 10.29 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செவன் சீட்டர் கொண்ட எம்பீவி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ.
வேரியண்ட்ஸ் மற்றும் வண்ணங்கள்
ருமியன் S, G மற்றும் V ஆகிய மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கின்றன. டொயோட்டாவின் இந்த புதிய மாடலை வாடிக்கையாளர்கள் ஐந்து வண்ணங்களிலிருந்து தேர்வு செய்யலாம். வண்ணங்களில் கஃபே ஒயிட், என்டைசிங் சில்வர், ரஸ்டிக் ப்ரௌன், ஐகானிக் க்ரே மற்றும் ஸ்பன்கி ப்ளூ ஆகிய வண்ணங்களில் இதை பெறலாம்.
டொயோட்டாவின் புதிய எம்பீவியின் டிசைன் மற்றும் எக்ஸ்டீரியர்
ருமியன் என்பது மாருதியின் எர்டிகாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் ஆகும். அதனால்தான் எர்டிகாவில் இருந்து வித்தியாசமாக தோற்றமளிக்கும் வகையில் அதன் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது வெர்டிகல்லி அடுக்கப்பட்ட ஃபோக் லைட்ஸ், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்ஸ் கொண்ட இனோவா போன்ற ஃப்ரண்ட் கிரில்லைப் பெறும். இதை தவிர, இந்த எம்பீவியின் நீளம் மற்றும் அகலம் அப்படியே இருக்கும்.
இன்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
ருமியனின் உட்புறத்தில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் மாருதி சுஸுகி எர்டிகாவைப் போலவே உள்ளன. இது சில வித்தியாசமான அம்சங்களைக் கொண்டுள்ளது, இது இன்னும் சிறப்பானதாக இருக்கும். இதில் ஒரு புதிய டூயல்-டோன் இன்டீரியர் தீம், வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி உடன் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் இரண்டாவது வரிசையில் ரூஃபில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. கூடுதலாக, இது டூயல்-டோன் சீட் ஃபேப்ரிக்ஸ், பேடில் ஷிஃப்டர்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் நான்கு ஸ்பீக்கர்ஸுடன் இரண்டு ட்வீட்டர்ஸைக் கொண்டுள்ளது.
ருமியன் இன்ஜின் விவரங்கள்
ருமியன் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும், இது 102bhp மற்றும் 136.8Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் உடன் இணைக்கப்படலாம். சிஎன்ஜி வேரியண்ட்டிலும் கிடைக்கும் இது, 87bhp மற்றும் 121.5Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் வெர்ஷன் லிட்டருக்கு 20.5 கி.மீ மைலேஜ் தருவதாகவும், சிஎன்ஜி வெர்ஷன் கிலோவுக்கு 26.1 கி.மீ ஏஆர்ஏஐ மைலேஜ் தருவதாகவும் கூறுகிறது.
சேஃப்டி ஃபீச்சர்ஸ்
பாதுகாப்பைப் பொறுத்தவரை, ருமியன் நான்கு ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் மற்றும் இபிடி, இஎஸ்பீ மற்றும் ஹில் ஹோல்ட் அஸ்சிஸ்ட் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். இதனுடன், ஃப்ரண்ட் சீட் பெல்ட்டின் உயரத்தை அட்ஜஸ்ட்டரும் கிடைக்கிறது. இந்த எம்பீவி சென்சார்ஸ் கொண்ட ரியர் பார்க்கிங் கேமரா, சென்ட்ரல் லொக்கிங் மற்றும் ஸ்பீட் சென்சிடிவ் ஆட்டோ டோர் லொக் போன்ற சேஃப்டி அம்சங்களைக் கொண்டிருக்கும்.
டொயோட்டா ருமியன் விலை
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோட்டா ருமியன் வேரியண்ட்ஸின் விலைகள்:
வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
S எம்டீ | ரூ. 10,29,000 |
S ஏடீ | ரூ. 11,89,000 |
G எம்டீ | ரூ. 11,45,000 |
V எம்டீ | ரூ. 12,18,000 |
V ஏடீ | ரூ. 13,68,000 |
S எம்டீ சிஎன்ஜி | ரூ. 11,24,000 |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்