- டெலிவரி செப்டம்பர் 8, 2023 முதல் தொடங்குகிறது
- இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.29 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
எர்டிகாவை அடிப்படையாகக் கொண்ட டொயோட்டா ருமியன் ரூ. 10.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதனுடன், இந்த எம்பீவியின் முன்பதிவு மற்றும் டெலிவரி தேதியையும் டொயோட்டா நேற்று வெளியிட்டுள்ளது.
ருமியனின் முன்பதிவுகள்
வாடிக்கையாளர்கள் ருமியன்னை ரூ. 11,000 டோக்கன் தொகையில் அருகிலுள்ள டீலர்ஷிப்பில் முன்பதிவு செய்யலாம். இந்த எம்பீவியின் டெலிவரி செப்டம்பர் 8, 2023 முதல் தொடங்கும்.
ருமியன் இன்ஜின் மற்றும் மைலேஜ் விவரங்கள்
ருமியனில் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இது 102bhp மற்றும் 136.8Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதன் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சிஎன்ஜி வேரியண்ட்டிலும் கிடைக்கிறது, இது 87bhp மற்றும் 121Nm டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் ஃபைவ் ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வேரியண்ட்ஸ் | மைலேஜ் (ஏஆர்ஏஐ சான்றளிக்கப்பட்டது) |
ருமியன் பெட்ரோல் மேனுவல் | லிட்டருக்கு 20.51 கி.மீ |
ருமியன் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் | லிட்டருக்கு 20.11 கி.மீ |
ருமியன் சிஎன்ஜி | லிட்டருக்கு 26.11 கி.மீ |
நியூ ருமியன் வேரியண்ட்ஸ் மற்றும் விலைகள்
ருமியனின் வேரியண்ட்டின் பெயர்கள் டொயோட்டாவின் மற்ற வாகனங்களைப் போலவே உள்ளன. இந்த எம்பீவி S, G மற்றும் V வேரியண்ட்டில் கிடைக்கிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறுகிறது, இது S மற்றும் V வேரியண்ட் உடன் மட்டுமே கிடைக்கின்றன. மேலும், சிஎன்ஜி S வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.
வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
S மேனுவல் | ரூ. 10.29 லட்சம் |
S ஆட்டோமேட்டிக் | ரூ. 11.89 லட்சம் |
S சிஎன்ஜி | ரூ. 11.24 லட்சம் |
G மேனுவல் | ரூ. 11.45 லட்சம் |
V மேனுவல் | ரூ. 12.18 லட்சம் |
V ஆட்டோமேட்டிக் | ரூ. 13.68 லட்சம் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்