- இந்தியாவில் இதன் விலை ரூ. 19.77 லட்சம்
- பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் இன்ஜின் விருபங்களில் கிடைக்கும்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இனோவா ஹைகிராஸ் உட்பட அதன் அனைத்து மாடல்களுக்கான காத்திருப்பு காலத்தை புதிய ஆண்டில் வெளியிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், நாட்டில் ஒரு குறிப்பிட்ட வெயிட்டிங் பீரியட்டை இது கட்டளையிட்டது.
தற்போது, ஹைகிராஸின் பெட்ரோல் வேரியன்ட் 24 வாரங்கள் வரையும், அதே நேரத்தில் பெட்ரோல்-ஹைப்ரிட் வேரியன்ட்க்கான காத்திருப்பு காலம் 65 வாரங்களில் இருந்து 60 வாரங்களாக குறைந்துள்ளது. இந்த வெயிட்டிங் பீரியட் முன்பதிவு செய்த நாளிலிருந்து பொருந்தும் மற்றும் பிராந்தியம், டீலர்ஷிப், வேரியன்ட், நிறம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம்
டொயோட்டா இனோவா ஹைகிராஸ்2.0-லிட்டர் என்ஏ பெட்ரோல் மற்றும் 2.0-லிட்டர் ஸ்ட்ராங்க்-ஹைப்ரிட் என இரண்டு இன்ஜின் விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இதன் 2.0-லிட்டர் என்ஏ பெட்ரோல் சிவிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு லிட்டருக்கு 16.13 கிமீ மைலேஜை வழங்குகிறது, பிந்தையது லிட்டருக்கு 23.24 கிமீ மைலேஜை` வழங்குவதாகக் கூறப்படுகிறது.
டொயோட்டா தற்போது இந்த எம்பீவி’யை GX, GX லிமிடெட் எடிஷன், VX, VX(O), ZX, மற்றும் ZX(O) என ஆறு வேரியன்ட்ஸில் ஆறு மற்றும் ஏழு சீட்டர் விருபங்களில் வழங்குகிறது. இந்த மாடல் ரூ. 19.77 லட்சம் முதல் ரூ. 30.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்கப்படுகின்றன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்