- புதிய டாப்-ஸ்பெக் பெட்ரோல் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்
- 7 மற்றும் 8 சீட்டிங் ஆப்ஷனில் வழங்கப்பட வாய்ப்புள்ளது
வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் மிகவும் பிரபலமான இனோவா ஹைகிராஸ் வேரியன்ட் பட்டியலை டொயோட்டா இந்தியா புதுப்பித்துள்ளது. மாருதி இன்விக்டோவுக்கு இணையான மாடல் இப்போது புதிய டாப்-ஸ்பெக் வேரியன்ட்டை பெட்ரோல் இன்ஜினில் மட்டுமே கிடைக்கும். ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் இந்த புதிய வேரியன்ட்டின் விலையை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், இது ஏப்ரல் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதுவரை இனோவா ஹைகிராஸின் GX வேரியன்ட் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டாக இருந்தது, இப்போது அது புதிய GX (O) வேரியன்ட்டால் மாற்றப்பட்டுள்ளது. GX வேரியன்ட்டுடன் ஒப்பிடும்போது, அம்சங்களின் அடிப்படையில் இது ஒரு பெரிய 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்கள், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, ரியர் சன்ஷேட், ரியர் டிஃபோகர், டூயல்-டோன் இன்டீரியர் மற்றும் சாஃப்ட்-டச் டேஷ்போர்டு மற்றும் எல்இடி ஃபாக் லேம்ப்ஸ் உள்ளன மேலும், வாடிக்கையாளர்கள் 7 மற்றும் 8 சீட்டிங் ஆப்ஷனில் இதைப் பெறலாம்.
இனோவா ஹைகிராஸ் இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் வருகிறது, 2.0-லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டார் மற்றும் 2.0-லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின். வரவிருக்கும் வேரியன்ட்டில் சிவிடீ கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 2.0 லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டாரும் கிடைக்கும். இந்த இன்ஜின் 172bhp பவரையும், 205Nm டோர்க் திறனையும் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்