- 14 மாதங்களில் 50,000 ஹைகிராஸ் விற்கப்பட்டது
- இதன் விலை ரூ. 19.77 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
டொயோட்டா இனோவா ஹைகிராஸ் நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்தியாவில் 50,000 யூனிட்களின் விற்பனையை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யுவி GX, VX, VX (O), ZX மற்றும் ZX (O) ஆகிய ஐந்து வேரியன்ட்ஸில் ரூ. 19.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது ஏழு மற்றும் எட்டு சீட்டிங் ஆப்ஷனில் கிடைக்கிறது.
இந்த எம்பீவியின் சர்வீஸ் மற்றும் உத்திரவாதமே ஹைகிராஸ் இந்த எண்ணிக்கையை எட்டியதற்கான காரணத்தை கார் உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த மாடல் 3 ஆண்டுகள் அல்லது 100,000 கிமீ உத்தரவாதத்துடன் வருகிறது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். இதை 5 ஆண்டுகள் அல்லது 220,000 கிமீ வரை நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. இது தவிர, ஹைப்ரிட் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 160,000 கிமீ உத்தரவாதமும் கிடைக்கிறது மேலும் நிறுவனம் இலவச ரோடு சைட் அசிஸ்டன்ஸும் (RSA) வழங்குகிறது.
இனோவா ஹைகிராஸ் இன்ஜின் மற்றும் மைலேஜ்
இனோவா ஹைகிராஸ் ஆனது டிஎன்ஜிஏ பிளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்ட ஒரு மாடலாகும், இதில் 2.0-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 2.0-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜின் உள்ளது. சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 16.13 கிமீ மைலேஜைத் அளிக்கிறது, அதே நேரத்தில் 2.0-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் இன்ஜினில் லிட்டருக்கு 23.24 கிமீ மைலேஜ் தருகிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் விபி சேல்ஸ் & மார்க்கெட்டிங் சப்ரி மனோகர் கூறுகையில், ' இனோவா ஹைகிராஸ் லான்ச் செய்யப்பட்ட பதினான்கு மாதங்களில் 50,000 யூனிட்கள் என்ற விற்பனை மைல்கல்லை எட்டியதன் மூலம், இனோவா ஹைகிராஸ் பெற்றுள்ள மிகப்பெரிய வரவேற்பில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இனோவா ஹைகிராஸின் இந்த வெற்றிக்குக் காரணம், எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை தான், இது எங்களை மேலும் முன்னேறத் தூண்டுகிறது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 இல் இனோவா ஹைகிராஸின் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் வெர்ஷன்னை டொயோட்டா காட்சிப்படுத்தியது, இது 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட எத்தனால் கலவையுடன் பெட்ரோலில் இயங்கக்கூடியது. மேலும், கடந்த மாதம் அதன் வெயிட்டிங் பீரியட் குறைக்கப்பட்டது, இது 60 மாதங்கள் அதாவது ஒரு வருடமாக குறைக்கப்பட்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்