- ஹைரைடரின் ஆரம்ப விலை ரூ. 10.86 லட்சம்
- இனோவா க்ரிஸ்டா மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கிறது
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் அக்டோபர் மாதத்தில் அதன் கார்ஸின் வெயிட்டிங் பீரியடை வெளிப்படுத்தியுள்ளது. இந்த கட்டுரையில், டொயோட்டா ஃபார்ச்சூனர், இனோவா க்ரிஸ்டா, ருமியன் மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் வெயிட்டிங் பீரியட் பற்றிய தகவல்களை இதில் வழங்கியுள்ளோம்.
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்
டொயோட்டா ஃபார்ச்சூனரை வாங்கும் வாடிக்கையாளர்கள் புக் செய்த நாளிலிருந்து 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஸ்டாண்டர்ட் மற்றும் லெஜண்டர் எடிஷனுக்கும் இது செல்லுபடியாகும்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் சிஎன்ஜி வேரியண்ட்க்கு 16 மாதங்கள், மைல்ட்-ஹைப்ரிட் வேரியண்ட்க்கு 7 மாதங்கள், ஸ்ட்ராங்-ஹைப்ரிட் (நியோ டிரைவ்) வேரியண்ட்க்கு 11 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட்டில் உள்ளது.
இனோவா க்ரிஸ்டா
இனோவா க்ரிஸ்டா பற்றி பேசுகையில், அதன் அனைத்து வேரியண்ட்ஸின் முன்பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியடில் உள்ளது. ஏழு மற்றும் எட்டு சீட்ஸ் கொண்ட GX, VX மற்றும் ZX ஆகிய மூன்று வேரியண்ட்ஸில் க்ரிஸ்டா வாங்க முடியும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
டொயோட்டா ருமியன் எம்பீவி
தற்போது, ருமியன் எம்பீவியின் பெட்ரோல் வேரியண்ட்க்கு முன்பதிவு செய்த நாளிலிருந்து 3-4 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட்டில் கிடைக்கின்றன. மறுபுறம், சிஎன்ஜி வேரியண்ட்க்கு 16-18 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இது தவிர, கார் உற்பத்தியாளர் செப்டம்பர் 2023 இல் 23,590 யூனிட்ஸை விற்றுள்ளார். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையை விட 53 சதவீதம் அதிகமாக உள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்