- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ 19.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கும்
கடந்த மாதம், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தனது கார்களின் விலையை ஜனவரி 2024 முதல் உயர்த்துவதாக அறிவித்திருந்தது. தற்போது கார் தயாரிப்பு நிறுவனம் விலை உயர்வு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பிராண்டின் ஏழு சீட்டர் கொண்ட எம்பீவி இனோவா க்ரிஸ்டாவில் இப்போது ரூ. 25,000 வரை விலை உயர்த்தப்பட்டது.
GX வேரியன்ட் தவிர, மற்ற இரண்டு வேரியன்டான VX மற்றும் ZX விலையில் ரூ. 25,000 வரை அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, க்ரிஸ்டாவின் பேஸ் வேரியன்ட்டின் ஆரம்ப விலை ரூ. 19,99,000 ஆகவும், டாப்-ஸ்பெக் ZX வேரியன்ட்டின் விலை ரூ. 26,05,000 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே.
இனோவா க்ரிஸ்டாவில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது, இது 148bhp மற்றும் 343Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இதில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
டொயோட்டா இனோவா க்ரிஸ்டாவின் புதிய விலைகள் பின்வருபவை:
வேரியன்ட் | எக்ஸ்-ஷோரூம் விலை |
GX 7 சீட்டர் | ரூ. 19,99,000 |
GX 8 சீட்டர் | ரூ. 19,99,000 |
VX 7 சீட்டர் | ரூ. 24,39,000 |
VX 8 சீட்டர் | ரூ. 24,44,000 |
ZX 7 சீட்டர் | ரூ. 26,05,000 |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்