- 14 புதிய அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன
- இது 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கிறது
டொயோட்டா தனது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பீவிகளில் ஒன்றான இனோவா க்ரிஸ்டாவின் GX ப்ளஸ் வேரியன்ட் ரூ. 21.39 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், இது ஏழு மற்றும் எட்டு இருக்கைகள் கொண்ட இரண்டு ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. அதேசமயம் 14 புதிய அம்சங்கள் அதன் GX ப்ளஸ் வேரியன்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக GX வேரியன்ட்டை விட ரூ. 1.3 லட்சம் விலை அதிகம்.
டொயோட்டா இனோவா க்ரிஸ்டாவின் இந்த புதிய GX ப்ளஸ் வேரியன்ட்டில் புதிய ஸ்டாண்டர்ட் கிரேடு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்களில் ரியர் கேமரா, ஆட்டோ ஃபோல்ட் மிரர்ஸ், டிவிஆர், டைமண்ட் கட் அலோய் வீல்ஸ், வூட்டேன் பேனல்கள் மற்றும் ப்ரீமியம் ஃபேப்ரிக் சீட்ஸ் ஆகியவை அடங்கும். மேலும், இது ஐந்து வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய க்ரிஸ்டா GX ப்ளஸ் வேரியன்ட்டில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது, இது 148bhp பவரையும், 343Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இந்த இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் இது ஈக்கோ மற்றும் பவர் ஆகிய இரண்டு டிரைவ் மோட்ஸை கொண்டுள்ளது.
இனோவா க்ரிஸ்டாவின் GX ப்ளஸ் வேரியன்ட்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வேரியன்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
இனோவா க்ரிஸ்டா GX ப்ளஸ் 7-சீட்டர் | ரூ. 21.39 லட்சம் |
இனோவா க்ரிஸ்டா GX ப்ளஸ் 8-சீட்டர் | ரூ. 21.44 லட்சம் |