- இந்தியாவில் ஹைரைடரின் விலை ரூ. 11.14 லட்சத்திலிருந்து தொடங்குகிறது
- 11 வண்ணங்கள் மற்றும் 4 வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மார்ச் மாதத்திற்கான அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் வெயிட்டிங் பீரியட்டை புதுப்பித்துள்ளது. இந்த கட்டுரையில், டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் வெயிட்டிங் பீரியட் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வோம்.
தற்போது, டொயோட்டா ஹைரைடரில் 9-10 மாதங்கள் காத்திருக்கும் காலம் உள்ளது, இது நியோ டிரைவ் (மிட்-ஹைப்ரிட்) வேரியன்ட்ஸ்க்கு பொருந்தும். இதேபோல், சிஎன்ஜி மற்றும் ஸ்ட்ராங்க்-ஹைப்ரிட் வேரியன்ட்ஸ்ஸை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் முறையே 7 மாதங்கள் மற்றும் 4 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 4 வேரியன்ட்ஸில் 11 வண்ணங்களில் வழங்கப்படும். வண்ணங்களைப் பொறுத்தவரை, இந்த மாடல் 7 மோனோடோன் வண்ணங்களிலும் 4 டூயல்-டோன் வண்ணங்களிலும் கிடைக்கிறது. மேலும் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் இதை மைல்ட்-ஹைப்ரிட், ஸ்ட்ராங்க்-ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் விருப்பங்களில் பெறலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்