- நிறுவனம் லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜ் தருவதாக கூறியுள்ளது
- இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது
டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் நல்ல ஃப்யூல் எஃபிஷியன்சி உள்ள எஸ்யுவியின் கார்ஸில் ஒன்றாகும். இதன் பர்ஃபார்மன்ஸ் ரொம்ப நல்லாவே இருக்கு, ஆனால் இதை நாங்க நகரங்களிலும் மற்றும் ஹைவேஸ்யில் ஒட்டும் பொது இதின் உண்மையான மைலேஜை நாங்கள் கண்டறிந்தோம்.
ஃப்யூல் முழுமையாக நிரப்பிய நிலையில் நாங்கள் இதை நகரங்களிலும் மற்றும் ஹைவேஸ்யில் ஒட்டி சோதனை செய்தோம். இது சிட்டியில் 81.7 கிமீயை 4.6 லிட்டர் பெட்ரோலிலும் மற்றும் ஹைவேஸ்யில் 93.1 கிமீயை 3.4 லிட்டர் பெட்ரோல் ஐ இது பயன்படுதியாது. ஹைரைடர் ஹைப்ரிட் இன் உண்மையான ஃப்யூல் எஃபிஷியன்சி நகரத்தில் லிட்டருக்கு 17.7 கி.மீ மற்றும் ஹைவேஸ்யில் லிட்டருக்கு 28.2 கி.மீ என இது தெரிவிக்கிறது.
1,300 கிலோ எடை கொண்ட இந்த காரின் ஃப்யூல் எஃபிஷியன்சி நன்றாக உள்ளது. இந்த எண்ணிக்கை, நிறுவனம் கூறியுள்ள ஃப்யூல் எஃபிஷியன்சியை லிட்டருக்கு 27.97 கி.மீ க்கு மிக அருகில் உள்ளது. இதற்குக் காரணம், ஆரம்பத்திலிருந்தே இந்த வண்டியை நாங்கள் கம்ஃபர்ட் மோடில் தான் ஓட்டி வருகிறோம், ஏனென்றால் பெரும்பாலானோர் தங்கள் வண்டியை இந்த மோடில் தான் ஒட்டுவார்கள். டேங்க் நிரப்பிய பிறகு, எம்ஐடி ஆனது சுமார் 600 கிலோமீட்டர் தூரத்திற்கான தூரத்தைக் காட்டியது, ஆனால் சோதனையின் முடிவில் அது உண்மையில் 770 கிமீ வரை சென்றது. இது அதன் உண்மையான ரேஞ்ச் பற்றிய ஒரு யோசனையையும் எங்களுக்கு வழங்கியது. சிட்டியில் கார் ஓட்டும்போது, அக்ஸலரேஷனிலிருந்து கால் எடுத்து பிரேக்கை அழுத்திய பின்னரே அதன் இவி மோட் தொடங்குகிறது.
ட்ராஃபிக்கில் ஓட்டும்போது பலமுறை இவி மோடில் மாறுவதை நாங்கள் கவனித்தோம், இது நிறைய ஃப்யூலை சேமிக்கிறது. ஆனால் பி மோடில் அதிக வேகத்தில் கூட, அதன் ரிஜென்யிலிருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்கப்படுகிறது. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இவி மோடில் லிட்டருக்கு 80 முதல் 90 கி.மீ வரை செல்லும், இது ஹைவேஸ்க்கு ஒரு வலிமையான காராக அமைகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்