-இந்தியாவில் ஃபார்ச்சூனரின் விலை ரூ. 33.43 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
-இது ஸ்டாண்டர்ட் மற்றும் லெஜெண்டர் வெர்ஷனில் கிடைக்கிறது
டொயோட்டா தனது கார்களுக்கான வெயிட்டிங் பீரியட்டை ஜனவரி 2024 வரை தொடரும் என்று தெரிவித்துள்ளது. அதன் ருமியன், ஹைரைடர், இனோவா க்ரிஸ்டா மற்றும் பிற மாடல்கள் பற்றிய தகவல்கள் எங்கள் இணையதளத்தில் உள்ளன, மேலும் ஃபார்ச்சூனரில் வெயிட்டிங் பீரியட் பற்றி இந்தக் கட்டுரையில் சொல்லப் போகிறோம்.
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யுவியில் இந்த மாதம் எட்டு வாரங்கள் வரை காத்திருக்கும் காலம் உள்ளது. இந்த வெயிட்டிங் பீரியட் இந்தியா முழுவதும் ஜனவரி 31 வரை செல்லுபடியாகும். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இதில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், நவம்பர் 2023 இல் ஸ்கோடா கோடியாக் மற்றும் எம்ஜி குளோஸ்டர் உடன் போட்டியிடும் இந்த காருக்கு, வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த நாளிலிருந்து 12 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஃபார்ச்சூனரில் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. அதன் இரண்டு இன்ஜின்களும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் மற்றும் விருப்பமான 4x4 அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர, வாடிக்கையாளர்கள் ஏழு வண்ண விருப்பங்கள் மற்றும் இரண்டு வேரியன்ட்ஸிலிருந்து தேர்வு செய்யலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்