- சான்றிதழ் சோதனையின் போது டீசலில் இயங்கும் டொயோட்டா கார்களில் முறைகேடுகள் நடந்துள்ளன
- இந்த மாடல்களுக்கான புக்கிங் தொடரும்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) அதன் வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட டீசல் இன்ஜின் மாடல்களின் டெலிவரியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த கார்களில் ஹைலக்ஸ், இனோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகியவை இதில் அடங்கும்.
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷனின் (டிஎம்சி) துணை நிறுவனமான டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் (டிஐசிஓ) மூன்று டீசல் இன்ஜின் மாடல்களின் ஹார்ஸ்பவர் வெளியீட்டு சான்றிதழ் சோதனைகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முறைகேடுகள் பவர் மற்றும் டோர்க் வளைவுகளின் 'மென்மையாக்குதல்' தொடர்பானவை, ஆனால் இன்ஜின் தொடர்பான எந்த உரிமைகோரல்களும் செய்யப்படவில்லை.
இந்த பாதிக்கப்பட்ட வாகனங்களின் சான்றிதழைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் தரவை மீண்டும் சரிபார்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் டொயோட்டா செயல்படுகிறது. இருப்பினும், பிராண்ட் தொடர்ந்து புதிய ஆர்டர்களை எடுக்கும்போது, பாதிக்கப்பட்ட வாகனங்களின் டெலிவரி தற்காலிகமாக நிறுத்தப்படும். ஏற்கனவே ஷோரூம்களை அடைந்து இன்னும் டெலிவரி செய்யப்படாத கார்களுக்கு, அது குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வாகனங்களின் பதிவு மற்றும் டெலிவரி தொடங்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்