- அதிக இன்புட் செலவுகள் காரணமாக விலைகள் அதிகரித்தன
- புதிய விலைகள் வெளியிடப்படவில்லை
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தனது அனைத்து வாகனங்களின் விலையையும் ஜூலை 5, 2023 முதல் உயர்த்தியுள்ளது. கார் தயாரிப்பாளர்கள் மாடல்ஸின் விலையை வெளியிடவில்லை என்றாலும், இந்த அதிகரிப்புக்கு இன்புட் செலவு காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவில் என்ன என்ன டொயோட்டா கார்ஸ் இருக்கு?
தற்போது, பிராண்டின் போர்ட்ஃபோலியோவில் க்ளான்ஸா, அர்பன் க்ரூஸர் ஹைரைடர், இனோவா க்ரிஸ்டா, இனோவா ஹைகிராஸ், ஃபார்ச்சூனர், லேஜென்டர், கேம்ரி மற்றும் வெல்ஃபயர் ஆகிய டொயோட்டா கார்ஸ் இந்தியாவில் உள்ளன.
ஜூன் 2023 இல் டொயோட்டா கார்ஸ்க்கான வெயிட்டிங் பீரியட்
மாடல்ஸ் | வெயிட்டிங் பீரியட் |
டொயோட்டா இனோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் | 12 மாதங்களுக்கு மேல் |
டொயோட்டா இனோவா ஹைகிராஸ் பெட்ரோல் | 4 மாதங்கள் |
டொயோட்டா ஃபார்ச்சூனர் | 3 மாதங்கள் |
டொயோட்டா க்ளான்ஸா எம்டீ | 1-2 மாதங்கள் |
டொயோட்டா க்ளான்ஸா சிஎன்ஜி | 1-2 மாதங்கள் |
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஹைப்ரிட் | 12 மாதங்களுக்கு மேல் |
டொயோட்டா அர்பன் க்ரூஸர்ஹைரைடர் நியோ டிரைவ் | 3-4 மாதங்கள் |
டொயோட்டா கேம்ரி | 3 மாதங்கள் |
டொயோட்டா வெல்ஃபயர் | 6 மாதங்கள் |
மாருதி சுஸுகி இன்விக்டோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
மாருதி சுஸுகி டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையிலான இன்விக்டோவை ரூ.24.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இதன் முன்பதிவு கடந்த மாதம் ரூ.25,000க்கு தொடங்கியது, விரைவில் டெலிவரி தொடங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்