டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் இந்தியாவில் கர்வ் இவியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது எலக்ட்ரிக் கார் வாங்குபவர்களுக்கு ஒரு புதிய விருப்பமாகும். டியாகோ மற்றும் பஞ்ச் போன்ற என்ட்ரி-லெவல் இவிகளின் வெற்றியைத் தொடர்ந்து, நெக்ஸான்இவியை விட கர்வ் இவிபிரீமியம் விருப்பமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பெரிய சைஸ், சிறந்த ஸ்டைலிங் மற்றும் கூடுதல் அம்சங்கள் நெக்ஸான்இவியை விட சிறந்த தேர்வாக அமைகிறது. நீங்கள் நெக்ஸான் இவியை வாங்க நினைத்தால், இந்தக் தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
கர்வ் இவயின் பாடி ஸ்டைல் மற்றும் ரோடு பிரசென்ஸ் முற்றிலும் புதியது மற்றும் தனித்துவமானது. நெக்ஸானின் ஃப்ரண்ட் லூக் மிகவும் ஒத்ததாக இருக்கிறது, ஆனால் கர்வின் ரியர் பகுதி அதை இன்னும் சிறபப்குகிறது.
கர்வ் இவிக்குள் அதிக இடத்தைப் பெறுவீர்கள். இது புதிய அப்ஹோல்ஸ்டரி மற்றும் 500 லிட்டர் பெரிய பூட் ஸ்பேஸைப் பெறுகிறது, இது நெக்ஸானின் 350 லிட்டர் பூட் ஸ்பேஸை விட அதிகம்.
கர்வ் இவியில் நீங்கள் பனோரமிக் சன்ரூஃப், எலக்ட்ரிக் பூட்-லிட் ஓப்பனர் மற்றும் நவீன தோற்றமுள்ள கேபின் ஆகியவற்றைப் பெறுவீர்கள். நெக்ஸான் இவி ஆனது நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளது, ஆனால் இந்த விஷயங்களில் கர்வ் முன்னணி வகிக்கிறது.
இன்ஜினைப் பற்றி பேசுகையில், கர்வ் இவி பல மேம்பாடுகள் மற்றும் புதுமைகளைக் கொண்டுள்ளது. கர்வ் 45 இவியின் பவர் நெக்ஸான் இவி போலவே உள்ளது (கர்வ் 45 இல் 148bhp மற்றும் 215Nm டோர்க், அதே நேரத்தில் நெக்ஸானில் 141bhp மற்றும் 215Nm டோர்க்). ஆனால் கர்வ் ஒரு பெரிய பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 502 கிமீ டிரைவிங் ரேஞ்சை கொடுக்கும், அதே சமயம் நெக்ஸான் இவியின் கோரப்பட்ட டிரைவிங் ரேஞ்ச் 465 கிமீ (மற்றும் புதிய நெக்ஸான் இவி 45 இன் 489 கிமீ) ஆகும்.
கர்வ் இவியின் ரைடு க்வாலிட்டி மற்றும் வசதி ஆகியவை நெக்ஸான் இவியைப் போலவே உள்ளது, இருப்பினும் காரின் சைஸ் மற்றும் கனமானதாக உள்ளது. ஆனால் அனைத்து மேம்பட்ட அம்சங்கள் மற்றும் அதனுடன் கிடைக்கும் சிறந்த இன்ஜின் காரணமாக, கர்வ் இவிஒரு சிறந்த தேர்வாகும். நெக்ஸான்இவியை வாங்கும் பலர் அதன் பெரிய மற்றும் சிறந்த வேரியன்ட்டிற்கு அதாவது கர்வ் இவிக்கு மாறினால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்