- ரூ.15 லட்சம் ரூபாய்க்கு உட்பட்டவை
- இவிஸ் மற்றும் ஐசிஇ ஆகியவை சமமான நிலையைக் கொண்டுள்ளன
எஸ்யுவிஸ் மற்றும் செடான்ஸ் இந்த ஆண்டின் சிறப்பம்சமாக இருந்தாலும், நீண்ட காலமாக வாங்குபவர்களிடையே பிரபலமாக இருக்கும் ஹேட்ச்பேக், அதன் ஓஜி பாடி ஸ்டைலை நம்மலால் மறக்க முடியாது. என்ன தான் ஹேட்ச்பேகிக்ன் எண்கள் குறைந்தாலும், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உள்ள சில புதிய ஹேட்ச்பேக்ஸின் எங்களின் சிறந்த 4 தேர்வுகள் இதோ.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
ஜனவரி 20 ஆம் தேதி அன்று லான்ச் செய்யப்பட்டது, இது ஹேட்ச்பேக்கிற்கான மிட்-லைஃப் புதுப்பிப்பாகும், மேலும் இது திருத்தப்பட்ட ஃப்ரண்ட் ஃபேஸ், புதிய வீல்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்சப் பட்டியலைப் பெற்றது. BS6 தொடக்கத்தில் டீசல் நிறுத்தப்பட்டது, இப்போது இந்த காரை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்டில் பெறலாம்.
எம்ஜி காமெட்
இந்தியாவிற்கான எம்ஜியின் இரண்டாவது இவி ஒரு வினோதமானது, ஒருவரால் எதிர்பார்க்கபட்ட அம்சங்கள் அன்னைதும் இந்த சிறிய காரில் நீங்க பெறலாம். ரேஞ்ச் (230 கி.மீ), பயணிகள் வசதியாக உட்காரக்கூடிய இன்டீரியர் கொண்டவை. காமெட் இவி ஆனது டாடா டியாகோ இவி மற்றும் சிட்ரோன் இ-C3க்கு போட்டியாக உள்ளது, இது எங்கள் பட்டியலில் இருக்கும் இரண்டாவது காராகும்.
சிட்ரோன் eC3
ஐசிஇயில் இயங்கும் சிட்ரோன் C3 ஐ அறிமுகப்படுத்தும் நேரத்தில், ஃப்ரென்ச் வாகன உற்பத்தியாளர் இந்தியாவிற்கான ஒரு பட்ஜெட் இவியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார், அது இறுதியில் சிட்ரோன் இ-C3 ஆக மாறியது. இது 29.2kWh பேட்டரி பேக் மற்றும் 320கி.மீ ரேஞ்சை தரக்கூடிய எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் ஆகும்.
மெர்சிடிஸ்-பென்ஸ் A45 ஏஎம்ஜி
மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி A45 S4MATIC+ இந்தியாவில் மே 24 அன்று ரூ.92.50 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 306bhp/400Nm உற்பத்தி செய்யும் 2.0-லிட்டர் ஃபோர் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் மற்றும் ஆல் வீல் டிரைவ் உடன் வழங்கப்படுகிறது. இது எங்கள் பட்டியலில் உள்ள இறுதி கார் ஆகும்
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்