- கர்வ் ஆகஸ்ட் 7 ஆம் தேதி லான்சாகும்
- கூடவே கர்வ் இவி வெர்ஷனும் லான்ச் ஆகும்
டாடா மோட்டார்ஸ் தனது புதிய கர்வ் ரேஞ்சை இந்தியாவில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை வெளிவரும் முன்பே, இந்த புதிய கூபே எஸ்யுவியின் சில முக்கிய விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆனது. இந்த கட்டுரையில், டாடா கர்வ் ஐ ஹூண்டாய் க்ரெட்டாவுடன் ஒப்பிடுவோம்.
ஹூண்டாய் க்ரெட்டாவுடன் ஒப்பிடும்போது டாடா கர்வ் பல புதிய மற்றும் அற்புதமான அம்சங்களைக் கொண்டிருக்கும். இதில் ஃபாக் லைட்ஸ், 18-இன்ச் அலோய் வீல்ஸ், ஃப்ளஷ் ஃபிட்டிங்க் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் எல்இடிஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லைட்ஸ்க்கு வெல்கம் மற்றும் குட்பை ஃபங்ஷன் ஆகியவை அடங்கும்.
இன்டீரியரில், கர்வில் இல்லுமினேட்டட் லோகோவுடன் கூடிய ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்/ட்ராய்டு ஆட்டோ கனெக்ட், ஒன்பது-ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம், சப்-வூஃபர், டச்-அடிப்படையிலான எஃப்ஏடீசிகன்ட்ரோல் மற்றும் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் ரோவுக்கு 45W யுஎஸ்பி டைப்-சி சார்ஜர் போன்ற அம்சங்களும் கிடைக்கும்.
இது தவிர, இது ஜெஸ்ச்சர் கன்ட்ரோல், எக்ஸ்பிரஸ் கூல் ஃபங்ஷன், கூலிங்க் மற்றும் இல்லுமினேஷன் ஃபங்ஷன் கொண்ட க்ளவ்பாக்ஸ், இஎஸ்பீ-அடிப்படையிலான டிரைவர் டாட்ஜ்-ஆஃப் அலர்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் ஏடாஸ்அடிப்படையிலான ட்ராஃபிக் ஸைன் ரெகக்னிஷன் (TSR) ஆகியவற்றைப் பெறுகிறது. சிறப்பு என்னவென்றால், சமீபத்தில் கசிந்த ஆவணத்தில், பாரத் என்கேபில் ஃபைவ்-ஸ்டார் ரேட்டிங்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்