டீசல் கார் விற்பனை முன்பு இருந்ததைப் போல இல்லைனாலும், அது முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இந்தக் கட்டுரையை எழுதும் போது, 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பல டீசல் எஸ்யுவிகள் வெளியிடப்படுவதைக் கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். இப்போது இந்தியா சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றும் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து டீசல் எஸ்யுவிகளின் முழுமையான லிஸ்ட் இதில் உள்ளன.
ஹூண்டாய் க்ரெட்டா
செகண்ட் ஜெனரேஷன் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான புதுப்பிப்பு நீண்ட காலத்துக்கு அப்பறம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் டீசல் இன்ஜின் 1.5-லிட்டர் ஃபோர்-சிலிண்டர் ஆகும், இது 113bhp/250Nm டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் ஏடீ உடன் இணைக்கப்பட்டுள்ளது. டீசல் ரேஞ்சின் பேஸ்-லெவல் E வேரியன்ட்டுடன் தொடங்கி SX(O) வேரியன்ட் வரை செல்கிறது, இது லெவல்-2 ஏடாஸ், 360-டிகிரி கேமரா, கனெக்டெட் கார் டெக்னாலஜி மற்றும் டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.
ஃபோர்ஸ் கூர்கா
ஹூண்டாய் க்ரெட்டாவைப் போலவே, ஃபோர்ஸ் கூர்காவிற்கான புதுப்பிப்பும் நீண்ட கால தாமதமாக இருந்தது, இந்த அப்டேட் மூலம் முதல் முறையாக 5-டோர் கொண்ட மாடலைப் பெறுகிறோம். இந்த மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் சில இன்டீரியர் மேம்படுத்தல்கள் மற்றும் புதிய எக்ஸ்டீரியர் எலிமெண்ட்ஸை உள்ளடக்கியது. இருப்பினும், அதன் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை, இது 2.6-லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும், இது 138bhp/320Nm டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஷிப்ட் ஆன் தி ஃப்ளையுடன் ஃபுல்-டைம் 4WDயும் அடங்கும்
மஹிந்திரா XUV 3X0
மிகச்சிறந்த காம்பேக்ட் எஸ்யுவிகளில் ஒன்றான இது XUV300க்கு பதிலாக, அதன் முன்னோடிகளைப் போலவே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலும் கிடைக்கிறது. இதன் டீசல் இன்ஜின் 1.5-லிட்டர், இது 115bhp/300Nm மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஏஎம்டீ உடன் இணைக்கப்பட்டுள்ளது. டீசல்-பவர்ட் மாடல்கள் டாப் வேரியன்ட்ஸில் கிடைக்கின்றன மற்றும் இதில் வென்டிலேடெட் சீட்ஸ் மற்றும் லெவல்-2 ஏடாஸ் போன்ற அம்சங்களுடன் வருகின்றன.
கியா சோனெட்
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் மூலம் இந்த ஆண்டைத் தொடங்கியது, இது வெளியீட்டிற்கு முன்னதாக நாங்கள் பிரத்தியேகமாகக் பார்த்தோம். இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜிகளுடன் வழங்கப்படும் அதே நேரத்தில் அதன் கேபின் மற்றும் அம்ச பட்டியல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது க்ரெட்டாவில் பயன்படுத்தப்பட்ட அதே இன்ஜின் மற்றும் 113bhp/250Nm டோர்க்கை வழங்குகிறது. ஹூண்டாய் போலவே, இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஏடீ உடன் இணைக்கப்படலாம்.
மஹிந்திரா பொலேரோ நியோ+
எங்கள் லிஸ்ட்டில் கடைசி பட்ஜெட் காராக மஹிந்திரா பொலேரோ நியோ+ ஆகும். இது பொலேரோ நியோவின் LWB வெர்ஷனாகும் மற்றும் புதிய 2.2-லிட்டர் எம்ஹாவ்க் டீசல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது, இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டீசல் இன்ஜின் 118bhp பவரையும் 280Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்