நாம் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியை நெருங்கியுள்ளோம், இந்த ஆண்டு, எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ், பிஎம்டபிள்யூ X1, ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மற்றும் பல எஸ்யுவி லான்ச்சை நாம் பார்த்திருக்கிறோம். இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் நாட்டின் சிறந்த ஏழு எஸ்யுவிஸை பட்டியலிடுகிறோம்.
1. மாருதி சுஸுகி ஜிம்னி
மாருதி ஜிம்னி பல மாத ஊகங்களுக்குப் பிறகு ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது. இது சிங்கிள் பெட்ரோல்-ஒன்லி பவர்ட்ரெயினுடன் ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய இரண்டு வேரியண்ட்ஸில் வழங்கப்படும். 1.5-லிட்டர் K15B சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் 103bhp மற்றும் 134Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஃபோர்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்ட்டர் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஹூண்டாய் எக்ஸ்டர்
ஹூண்டாய் எக்ஸ்டர் ஒரு மைக்ரோ-எஸ்யுவி ஆகும், இது ஹூண்டாய் வென்யூ வரிசையில் கீழே இடம்பெறும். இது ஏழு வேரியண்ட்ஸிலும், சிஎன்ஜி உட்பட இரண்டு பவர்ட்ரெயின் விருப்பங்களிலும் வழங்கப்படும். அம்சங்களைப் பொறுத்தவரை, இது ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆராவிலிருந்து சிலவற்றைக் எடுக்கும்.
1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தும் இந்த எக்ஸ்டர் எஸ்யுவி, பெட்ரோல் மோடில் 82bhp மற்றும் 114Nm டோர்க்கை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிஎன்ஜி மோடில், இன்ஜின் 68bhp மற்றும் 95nm டோர்க்கை உருவாக்கும் வாய்ப்புள்ளது.
3. டாடா பஞ்ச் சிஎன்ஜி
டாடா பஞ்ச்சிஎன்ஜி ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது, மேலும் இது விரைவில் நாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி கிட் உடன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அல்ட்ரோஸ் சிஎன்ஜிக்குப் பிறகு, இந்த சிஎன்ஜி டெக்னாலஜியைப் பயன்படுத்தும் பிராண்டின் வரிசையில் மைக்ரோ-எஸ்யுவி இரண்டாவது இடத்தில் இருக்கும். மேலும், சிஎன்ஜி தோற்றத்தில் உள்ள டாடா அல்ட்ரோஸ் போலவே, இது சன்ரூஃப் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. சிட்ரோன் C3 ஏர்கிராஸ்
C3-அடிப்படையிலான மிட்-சைஸ் எஸ்யுவி, C3 ஏர்கிராஸை ஏப்ரல் மாதத்தில் சிட்ரோன் வெளியிட்டது. 4.3-மீட்டர் நீளம் உள்ள எஸ்யுவி ஆனது C3 ஹேட்ச்பேக்கைப் போலவே இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைன் விசேஷங்களை கொண்டுள்ளது. இது ஃபைவ் மற்றும் செவன்-சீட்டர் ஆப்ஷன்ஸில் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும். இந்த இன்ஜின் 109bhp மற்றும்190nm டோர்க்கையும் உற்பத்தி செய்யும் வாய்ப்புள்ளது.
5. ஹோண்டா எலிவேட்
ஜூன் 6, 2023 இல் எலிவேட் எஸ்யுவியை ஹோண்டா வெளியிடும். இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யுவி, இந்திய கார் வாங்குபவர்களுக்காக நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. எலிவேட் எஸ்யுவி ஆனது அதன் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் பவர்ட்ரெயின்ஸை ஹோண்டா சென்சிங் ஏடாஸ் டெக்னாலஜி போன்ற அம்சங்களுடன் அதன் செடான் உடனான ஐந்தாவது ஜெனரேஷன் சிட்டியிடமிருந்து வாங்கும்.
இதன் விலை இந்தியாவில் Rs.10 லட்சம் முதல் Rs.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
6. கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்
கியா செல்டோஸ் கொரியன் வாகன உற்பத்தியாளருக்கு நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஜூலையில் இது ஒரு புதிய மாற்றத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அப்டேட் மூலம், செல்டோஸ் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற ப்ரொஃபைல்ஸை பெறும். பவர்ட்ரெயினைப் பொறுத்தவரை, தற்போதைய மறு செய்கையின் அதே இன்ஜின் விருப்பங்களுடன் இது தொடரும்.
7. டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்
சில மாதங்களாக, டாடா நெக்ஸான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவிஸில் ஒன்றாகும். மாற்றங்களைப் பொறுத்தவரை, இது ரிடிசைன் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டிஆர்எல்ஸ், முன் மற்றும் பின்புறத்தில் லைட் பார் மற்றும் புதிய அலோய் வீல்ஸ் ஆகியவற்றைப் பெறும். அதன் அம்சங்களைப் பொறுத்தவரை, இது ஒரு பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 360-டிகிரி கேமரா மற்றும் லெவல் 1 ஏடாஸ் டெக்னாலஜியையும் பெறும்.
மேலும், வரவிருக்கும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டுடன் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்ட டர்போ-பெட்ரோல் இன்ஜினை கார் தயாரிப்பாளர் அறிமுகப்படுத்தலாம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்