நாட்டில் உள்ள பல கார் உற்பத்தியாளர்கள் தங்கள் புதிய மாடல்ஸை2023 இல் எஸ்யுவிபிரிவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். நாம் ஏற்கனவே ஆண்டின் இரண்டாம் பாதியை நெருங்கி வருகிறோம், இதுவரை, பல்வேறு எஸ்யுவிஸின் சோதனைக் கார்ஸ் மற்றும் அவற்றின் அறிமுகத்திற்கு முன்னதாகவே காணப்பட்டன. இந்தியாவில் இந்த ஆண்டில் வரவிருக்கும் அனைத்து எஸ்யுவிஸின் பட்டியல் கீழே உள்ளன.
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் - ரூ. 8 லட்சம் முதல் ரூ. 15 லட்சம்
கியா மோட்டார்ஸ் தனது சோனெட் எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வேலை செய்து வருகிறது. இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது மற்றும் இது டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் சோதனைக் கார்ஸ் இந்தியாவின் சாலைகளில் சுற்றிக் கொண்டிருந்தது. நியூ சோனெட் புதிய அலோய் வீல்ஸ் உட்பட வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களுடன் முன் மற்றும் பின்புறத்தில்புதிய தோற்றத்தைப் பெறும். இண்டீரியரை பொறுத்தவரை, இது புதிய இன்டீரியர் ட்ரிம்ஸுடன் புதிய டாஷ்போர்டு அமைப்பைக் கொண்டிருக்கும். புதிய BS6 2 மற்றும் ஆர்டிஇ எமிஷன் விதிமுறைகளை சந்திக்க சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட அதே இன்ஜின்ஸால் இந்த மாடல் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் - ரூ. 8.50 லட்சம் முதல் ரூ. 15 லட்சம்
டாடா நெக்ஸான் 2017 ஆம் ஆண்டில் வந்ததிலிருந்து இந்திய மார்கெட்டில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவிஸில் ஒன்றாக உள்ளது. இப்போது, கார் தயாரிப்பாளர் விரைவில் அதன் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்னை அறிமுகப்படுத்த உள்ளது. வரவிருக்கும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் சோதனைக் கார் பல முறை சாலையில் காணப்பட்டன. புதிய ஸ்டார் வடிவ அலோய் வீல்ஸில் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சாலையில் சவாரி செய்வதை சமீபத்திய ஸ்பாட்டிங் குழு வெளிப்படுத்தியது.
புதிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருடன் பெரும்பாலான மாற்றங்கள் உட்புறத்தில் செய்யப்படும். மேலும், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்ஸில் ஒரு புதிய கியர் லெவர் மற்றும் பேடில்ஷிஃப்டர்ஸுடன் வரும்.
அதே நேரத்தில்,இது புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் டீசல் பதிப்பிலிருந்து அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா பஞ்ச் சிஎன்ஜி - ரூ. 8 லட்சம் முதல் ரூ. 10 லட்சம்
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் டாடா மோட்டார்ஸ் சிஎன்ஜி பஞ்ச் எஸ்யுவியை காட்சிப்படுத்தியது, விரைவில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்ச் புதிய ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி டெக்னாலஜி மற்றும் கேஸ் லீக்டிடெக்ஷன், தெர்மல் இன்ஸிடெண்ட் ப்ரோடெக்ஷன் மற்றும் எரிபொருள் நிரப்பும் போது கார் சுவிட்ச் ஆஃப் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான மைக்ரோ சுவிட்ச் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வரும். மேலும், பஞ்ச் சிஎன்ஜி நேரடியாக சிஎன்ஜி முறையில் தொடங்கும் திறன் கொண்டதாக இருக்கும். பவர்ட்ரெயின்னைப் பொறுத்தவரை, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த இன்ஜின் சிஎன்ஜி முறையில் 72bhp மற்றும் 95Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், பஞ்ச் சிஎன்ஜியில்வாய்ஸ்அசிஸ்டட்சன்ரூஃப் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் - ரூ. 6 லட்சம் முதல் ரூ. 10 லட்சம்
ஹூண்டாய் சமீபத்தில் வரவிருக்கும் எக்ஸ்டர் எஸ்யுவிஉடன் மைக்ரோ-எஸ்யுவி இடத்தில் அதன் வருகையை அறிவித்தது. கார் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே எக்ஸ்டர்ரின் முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. இது ஏழு வேரியண்ட்ஸ் மற்றும் ஒன்பது நிறம் விருப்பங்களிலும் வழங்கப்படும். எக்ஸ்டர் எஸ்யுவிஹூண்டாய் வென்யூவிற்கு கீழே வைக்கப்படும் மற்றும் நிறுவனம் பொருத்திய சிஎன்ஜி கிட் விருப்பத்துடன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இதன் டிரான்ஸ்மிஷனில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டை பொருதப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்