ஆகஸ்ட் மாதம் பல கார் உற்பத்தியாளர்களுக்கு ஒரு முக்கியமான மாதமாகும், மேலும் வரும் மாதத்தில் டாடா, சிட்ரோன், மெர்சிடிஸ், ஆடி மற்றும் வால்வோ போன்ற கார் தயாரிப்பாளர்களிடமிருந்து பல அறிமுகங்களை எதிர்பார்க்கிறோம். அந்தந்த உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு சிஎன்ஜி இயங்கும் எஸ்யுவி, செவன் சீட்டர் மிட்-சைஸ் எஸ்யுவி, எலக்ட்ரிக் எஸ்யுவி மற்றும் லக்சுரி எஸ்யுவி ஆகியவை அடுத்த மாதம் மார்க்கெட்டில் தங்கள் முத்திரையைப் பதிக்கும். இந்த கட்டுரையில், ஆகஸ்ட் 2023 இல் முதல் 5 வெளியீடுகளை பட்டியலிட்டுள்ளோம்.
டாடா பஞ்ச் சிஎன்ஜி
டாடா பஞ்ச் சிஎன்ஜி ஆனது முதன்முதலில் அல்ட்ரோஸ் சிஎன்ஜி உடன் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது. கார் தயாரிப்பாளர் சமீபத்தில் அல்ட்ரோஸ் சிஎன்ஜியை அறிமுகப்படுத்தியது, மேலும் பஞ்ச் அடுத்த மாதம் மார்க்கெட்க்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அல்ட்ரோஸ் உடன் ட்வின் சிலிண்டர் டெக்னாலஜியை பகிர்ந்து கொள்ளும், பஞ்ச் சிஎன்ஜி ஆனது 1.2 லிட்டர், த்ரீ-சிலிண்டர், என்ஏ பெட்ரோல் மோட்டார் மூலம் 86bhp மற்றும் 113Nm டோர்க்கை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட சிஎன்ஜி மோடில், இது 77bhp மற்றும் 97Nm டோர்க்கை வெளிப்படுத்தும். அதன் விலைகளைப் பொறுத்தவரை, பஞ்சின் சிஎன்ஜி வெர்ஷன் சமமான பெட்ரோல் வெர்ஷனை விட ரூ.50,000 - 70,000 அதிகம் ஆகும்.
மெர்சிடிஸ் -பென்ஸ் GLC
மெர்சிடிஸ் -பென்ஸ் இந்தியா தனது வரவிருக்கும் எஸ்யுவி, GLC, நாட்டில் வெளியிடப்படும் தேதியை உறுதி செய்துள்ளது. செகண்ட் ஜெனரேஷன் GLC ஆனது கடந்த ஆண்டு உலகளவில் அறிமுகமானது மற்றும் இந்தியாவில் ஆகஸ்ட் 9, 2023 அன்று அறிமுகப்படுத்தப்படும். இந்த மாடல், பிராண்டின் 4matic ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கூடிய பெட்ரோல் மற்றும் டீசல் பவர் இன்ஜினுடன் இரண்டு ட்ரிம்ஸில் கிடைக்கும். இந்த லக்சுரி எஸ்யுவியின் முன்பதிவுகள் தற்போது டோக்கன் தொகையான ரூ.1.5 லட்சத்தில் ஆரம்பம் ஆகும்.
ஆடி Q8 இ-ட்ரான்
மற்றொரு லக்சுரி கார் தயாரிப்பாளரான ஆடி, அதன் புதிய எலக்ட்ரிக் Q8 இ-ட்ரான் மற்றும் இ-ட்ரான் ஸ்போர்ட்பேக்கை ஆகஸ்ட் 18, 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. Q8 இ-ட்ரான் 95kWh மற்றும் 114kWh பேட்டரியுடன் இரண்டு ட்ரிம்ஸில் கிடைக்கும். இந்த பேட்டரி யூனிட் 408bhp மற்றும் 664Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்யும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்ஸுடன் இணைக்கப்படும். இந்த எலக்ட்ரிக் எஸ்யுவி வெறும் 5.6 வினாடிகளில் மணிக்கு 0-100 கி.மீ வேகத்தை எட்டிவிடும். டிரைவிங் ரேஞ்சைப் பொறுத்தவரை, பெரிய பேட்டரி பேக் முழு சார்ஜில் 600 கி.மீ வரை செல்லும்.
சிட்ரோன் c3 ஏர்கிராஸ்
சிட்ரோன் தனது புதிய தயாரிப்பான C3 ஏர்கிராஸை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் காட்சிப்படுத்தியது. C3 ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்டு, C3 ஏர்கிராஸ் என்பது மூன்று வரிசை, செவன் சீட்டர் கொண்ட எஸ்யுவி ஆகும், இது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்ட்டில் உள்ள மற்றவற்றுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மோட்டார் 109bhp மற்றும் 190Nm டோர்க்கையும் உருவாக்கும்.
வால்வோ C40 ரீசார்ஜ்
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் புதிய C40 ரீசார்ஜை ஜூன் 14, 2023 அன்று நாட்டில் வெளியிட்டது. C40 ரீசார்ஜ் ஆனது XC40 ரீசார்ஜ் அடிப்படையிலானது மற்றும் சிகேடி பாதை வழியாக இந்தியாவிற்கு வரும். இந்த மாடலில் 78kWh பேட்டரி பேக்குடன் ஒற்றை டாப்-ஸ்பெக் வேரியண்ட்டில் வழங்கப்படும். ட்வின் மோட்டார் அமைப்புடன், எஸ்யுவி அதிகபட்சமாக 405 bhp மற்றும் 660Nm டோர்க்கையும் கொண்டுள்ளது. இந்த வால்வோ C40 ரீசார்ஜ் ஒரு முழு சார்ஜில் 530 கி.மீ ரேஞ்ச் வரை செல்லும் என்று பிராண்ட் கூறுகிறது. அதன் சார்ஜிங் ஸ்பீட்டை பொறுத்தவரை, 150kW டிசி ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 27 நிமிடங்களில் பேட்டரி பேக்கை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்