- பட்டியலில் நெக்ஸான் 15,000 யூனிட்ஸை விற்று முன்னணியில் உள்ளது
- ஹூண்டாய் க்ரெட்டா அதிக விற்பனையான மிட்-சைஸ் எஸ்யுவி ஆக உள்ளது
மாருதி சுஸுகி, டாடா, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா போன்ற உற்பத்தியாளர்களுக்கு கடந்த மாதம் சிறப்பான விற்பனையாக இருந்தது. பலேனோ ஹேட்ச்பேக் செப்டம்பர் 2023 இல் நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாடலாகத் தொடர்ந்தது. இருப்பினும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நெக்ஸான் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தக் கட்டுரையில், செப்டம்பர் 2023 இல் இந்தியாவில் விற்ற முதல் ஐந்து எஸ்யுவிஸைப் பற்றி பார்ப்போம்.
1. டாடா நெக்ஸான்
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டை 14 செப்டம்பர் 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சமீபத்திய புதுப்பித்தலுடன் எஸ்யுவி பெரிய எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் மாற்றங்களைப் பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள், வாகன உற்பத்தியாளர் நாடு முழுவதும் 15,325 நெக்ஸான் யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 14,518 யூனிட்ஸை விட ஆறு சதவீத வளர்ச்சியை கண்டது.
2. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவிஸில் தொடர்ந்து இடம்பிடிக்கும் சில எஸ்யுவிஸில் ஒன்றாகும். நெக்ஸானுக்கு அடுத்தபடியாக பிரெஸ்ஸா 324 யூனிட்ஸ் குறைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. செப்டம்பர் 2022 இல் 15,445 யூனிட்ஸுடன் ஒப்பிடுகையில், மாருதி எஸ்யுவி விற்பனையில் மூன்று சதவீதம் சரிவைக் போன மாதம் கண்டது.
3. டாடா பஞ்ச்
மூன்றாவது பிரபலமான மாடல் டாடா பஞ்ச் எஸ்யுவி ஆகும். வாகன உற்பத்தியாளர் செப்டம்பர் 2023 இல் 13,036 யூனிட் பஞ்ச் விற்பனையை பதிவு செய்தார். நெக்ஸானைப் போலவே, பஞ்ச் விற்பனையும் கடந்த ஆன்டை விட ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது.
4. ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரெட்டா 2015 இல் வந்ததிலிருந்து கொரிய வாகன உற்பத்தியாளரின் சிறந்த விற்பனையாளராக க்ரெட்டா இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 2023 இல் இந்த பிராண்ட் மிட்-சைஸ் எஸ்யுவியின் 12,717 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்ஸுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
5. ஹூண்டாய் வென்யூ
ஹூண்டாய் இந்தியா ஏடாஸ் வேரியண்ட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் வென்யூவின் வரிசையை புதுப்பித்தது ரூ. 12.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. இதன் மூலம், சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவி ஆனது ஏடாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய அதன் முதல் பிரிவாகும். இதனால் இந்த மாடலுக்கு மார்க்கெட்க்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 2023 இல், வாகன உற்பத்தியாளர் வென்யூவின் 12,204 யூனிட்ஸை நாட்டில் விற்பனை செய்தார்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்