கடந்த ஆண்டு வரை இந்தியாவில் செடான் தயாரிக்கப்படாமல் இருந்தன, பின்னர் இந்த ஆண்டு பிரிவில் பல வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளது. புதியதல்ல, ஆனால் ஜெனரேஷனல் அப்டேட்ஸ் வெர்னா, ஃபிஃப்த்-ஜெனரேஷன் சிட்டி போன்ற மாடல்ஸால் பெறப்பட்டது, மேலும் பலவற்றை இதில் பார்ப்போம். இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் இந்திய மார்க்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் ஐந்து செடான் கார்ஸை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.
ஹூண்டாய் வெர்னா
மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் வெர்னா பழைய ஜெனக்குப் பதிலாக பிராண்டின் புதிய ‘பாராமெட்ரிக் டைனமிசம்’ வடிவமைப்பு அடையாளத்துடன் மாற்றப்பட்டது. புதிய வெர்னா, அதன் புதிய தோற்றம் மற்றும் அதன் போட்டியாளர்களை விட அதிக அம்சங்களுடன் முற்றிலும் விலகி உள்ளது. விலைகளைப் பொறுத்தவரை, மிட்-சைஸ் செடான் நான்கு வேரியண்ட்ஸில் ஆரம்ப விலையில் ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). வெர்னாவில் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. இது இந்தியாவில் ஹோண்டாவின் ஃபிஃப்த்-ஜெனரேஷன் சிட்டி, ஃபோக்ஸ்வேகன் வர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவற்றுக்கு எதிராக போட்டியிடுகிறது.
ஹோண்டா ஃபிஃப்த்-ஜென் சிட்டி
ஹோண்டா தனது ஃபிஃப்த்-ஜெனரேஷன் சிட்டியின் மிட்-லைஃப் புதுப்பிப்பை இந்தியாவில் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. செடான் அதன் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் சிறிய மாற்றங்களை பெற்றுள்ளது, இதன் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). ஒரு புதிய பேஸ் வேரியண்ட்டின் கூடுதலாக, சிட்டி இப்போது அதன் வரிசையில் SV, V, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்ஸைக் கொண்டுள்ளது. புதிய சிட்டி க்கான இன்ஜின் விருப்பங்களில் இரண்டு டியூன் லெவல்ஸில் 1.5 லிட்டர் இன்ஜின், என்ஏ பெட்ரோல் மற்றும் ஒரு ஹைப்ரிட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், ஹைப்ரிட் வெர்ஷனின் விலை ரூ.18.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட்
ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டு ஜனவரியில் புதிய கிராண்ட் i10 நியோஸுடன் அறிமுகமானது. புதுப்பிக்கப்பட்ட இந்த மாடல் நான்கு வேரியண்ட்ஸில் மற்றும் சிங்கிள் பெட்ரோல் இன்ஜினுடன் ஆறு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இது ரூ.6.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் புதிய மறுவடிவமைக்கபட்ட எல்இடி டிஆர்எல்ஸ் மற்றும் 15-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸ் உள்ளிட்ட காஸ்மெட்டிக் அப்டேட்ஸுடன் வந்தது. அம்சங்களைப் பொறுத்தவரை, காம்பேக்ட் செடானில் டீபீஎம்எஸ், வயர்லெஸ் சார்ஜர், ஃபுட்வெல் லைட்டிங், 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்டாண்டர்டாக நான்கு ஏர்பேக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட்
லக்சுரி வாகனத் தயாரிப்பாளரான மெர்சிடிஸ்-பென்ஸ், மே 2023 இல் அதன் என்ட்ரி-லெவல் செடான், ஏ-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகபடுத்தியது. இந்த செடானின் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை ரூ.45.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). மேலும், இந்த பிராண்ட் இந்த ஆண்டு டிசம்பரில் ஏ-கிளாஸின் டீசல் வெர்ஷனை அறிமுகப்படுத்த உள்ளது. மாற்றங்களைப் பொறுத்தவரை, இந்த ஏ-கிளாஸ் புதிய கிரில், ஸ்லீக்கர் ஹெட்லேம்ப்ஸ், மாற்றப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்பர்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேபின் ஆகியவற்றை பெறுகிறது. இது 161bhp மற்றும் 250Nm டோர்க்கை வழங்கும் செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட்டுடன் 1.3-லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் செவென்த் ஜெனரேஷன் அதன் எலக்ட்ரிக் ட்வின், i7 உடன் இந்திய மார்க்கெட்டில் நுழைந்தது. சிங்கிள் டாப்-ஸ்பெக் வெர்ஷனில் வழங்கப்படும், i7 இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான வளைந்த ட்வின் ஸ்கிரீன்ஸ், பயணிகளுக்கு ரியரில் 31-இன்ச் 8k தியேட்டர் டிஸ்ப்ளே ஸ்கை ரூஃபில் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் பிற ஹை-டெக் அம்சங்களுடன் வருகிறது. 7 சீரிஸ் தற்போது ரூ.1.70 கோடி விலையில் உள்ளது மற்றும் இதில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 376bhp மற்றும் 520Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்யும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்