- டொயோட்டா ஹைரைடருக்கு நீண்ட வெயிட்டிங் இருக்கும்
- ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் விரைவில் லான்ச் ஆகும்
மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்ட் தற்போது இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான வகையாகும். ஹூண்டாய், கியா மற்றும் மாருதி சுஸுகி போன்ற உற்பத்தியாளர்கள் இந்த இடத்தில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர்.கார் வாங்குவதற்க்கு வெயிட்டிங் பீரியட் முக்கிய தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகும். மேலும், இந்தக் கட்டுரையில், இந்தியாவில் உள்ள முதல் ஐந்து மிட்-சைஸ் எஸ்யுவிஸ்க்கான வெயிட்டிங்கை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.
ஹூண்டாய் க்ரேட்டா
ஹூண்டாய் க்ரேட்டா ஆனது ஏழு ட்ரிம்ஸிலும் மற்றும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்ஸில் வழங்கப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேரியண்ட்டை பொருத்து க்ரேட்டா எஸ்யுவி 20 முதல் 30 வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியட்டில் கிடைக்கும். பெட்ரோல் வேரியண்ட்டில் வரும் SX வேரியண்ட்க்கு குறைந்தபட்சமாக ஒரு மாதம் வெயிட்டிங், மறுபுறம் டீசல் S வேரியண்ட்டிற்கு 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கொறிக்கபட்டுள்ளது.
மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா
மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா வலுவான ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் அறிமுகமானது மற்றும் மிட்-சைஸ் எஸ்யுவி வாங்குபவர்களுக்கு விரைவில் பிரபலமான விருப்பமாக மாறியது. கிராண்ட் விட்டாராவை ஆறு வேரியண்ட்ஸில் மூன்று இன்ஜின்ஸுடன் ரூ. 10.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் பெறலாம். வெயிட்டிங் பீரியடைப் பொறுத்தவரை, இந்த எஸ்யுவி தற்போது நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை வெயிட்டிங்கை ஈர்க்கிறது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவுடன் அதன் இயங்குதளம் மற்றும் இன்ஜின்ஸைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த எஸ்யுவி பெட்ரோல், பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி வடிவில் நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இப்போது, இந்த பட்டியலிருந்து, ஹைரைடருக்கு அதிகபட்சமாக 7 முதல் 12 மாதங்கள் வெயிட்டிங் பீரியட்டில் உள்ளது.
கியா செல்டோஸ்
கியா சமீபத்தில் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் பேஸ்-ஸ்பெக் வேரியண்ட்டிற்கு ரூ.10.90 லட்சம் அறிமுக விலையாக உள்ளன. இது தற்போது அதன் செக்மென்ட்டில் மிகவும் சிறப்பம்சங்கள் நிறைந்த எஸ்யுவிஸில் ஒன்றாகும். நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஏற்கனவே புதிய செல்டோஸின் டெலிவரியைப் பெறத் தொடங்கியுள்ளனர். எஸ்யுவிக்கான வெயிட்டிங் பீரியட் தற்போது இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை உள்ளது.
ஹோண்டா எலிவேட்
இந்தியாவில் வரவிருக்கும் எலிவேட் எஸ்யுவியின் விலையை ஹோண்டா இன்னும் அறிவிக்கவில்லை. ஹோண்டா சிட்டியை போலவே பெட்ரோல் இன்ஜினுடன் இந்த மாடல் வழங்கப்படும். இப்போது, அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, ஊற்பத்தியாளர் எஸ்யுவிக்கான வெயிட்டிங் பீரியட்டை வெளிப்படுத்தியுள்ளது. ஹோண்டா எலிவேட்டின் டெலிவரியைப் பெற வாடிக்கையாளர்கள் 16 முதல் 18 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்