இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்ஸ்க்கான தேவை அதிகரித்து வருவதால், பல கார் உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களின் பட்டியலில் புதிய எலக்ட்ரிக் விருப்பங்களை அறிமுகப்படுத்துகின்றனர். பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைகளுடன் பெரிய மற்றும் சிறிய பல பிராண்டுஸ் உள்ளன, ஆனால் மைலேஜிற்கு வரும்போது, பின்வரும் ஐந்து வாகனங்கள் முதலிடத்தில் உள்ளன.
5. பிஎம்டபிள்யூ i4- 590 கி.மீ
பிஎம்டபிள்யூ i4 எலக்ட்ரிக் செடான் விலை ரூ.69.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 590 கி.மீ தூரத்தை கடக்கும். i4 ஆனது ஒரு ஃபூல்லி லோட்டெட் இடிரைவ் 40 வேரியண்டில் கிடைக்கிறது மற்றும் 335bhp மற்றும் 430Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் 83.9kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது.
4. பிஎம்டபிள்யூ i7- 625 கி.மீ
625 கி.மீ ரேஞ்சை வழங்கும் i7 ஐ 1.95 கோடி ரூபாய்க்கு BMW ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இது 101.7kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது 536bhp மற்றும் 744Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. சார்ஜ் செய்வதற்கு, i7 க்கு 11kW ஏசி மற்றும் 195kW டிசி சார்ஜர் விருபங்களில் உள்ளது.
3. ஹூண்டாய் ஐயோனிக் 5 - 631 கி.மீ
ஹூண்டாய் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் ஐயோனிக் 5 ஐ ரூ 44.95 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியது. ஏஆர்ஏஐயின் படி, ஐயோனிக் 5 ஆனது 631 கி.மீ தூரத்தை கடக்கும். இது 72.6kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இதன் மோட்டார் 216bhp மற்றும் 350Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. 350kW டிசி சார்ஜரின் உதவியுடன் 18 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
2. கியா EV6 - 708 கி.மீ
கியா EV6 ஆனது 77.4kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது ஆர்டபிள்யூடி உடன் 223bhp மற்றும் 350Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. அதேசமயம் ஏடபிள்யூடி உடன் 321bhp மற்றும் 605Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 708 கி.மீ தூரம் வரை செல்லும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் ஆர்டபிள்யூடி மற்றும் ஏடபிள்யூடி வெர்ஷன்ஸில் கிடைக்கிறது.
1. மெர்சிடிஸ் பென்ஸ் EQS - 857 கி.மீ
மெர்சிடிஸ் பென்ஸ் EQS அதிக மைலேஜைத் தருகிற எலக்ட்ரிக் கார்ஸை வழங்குகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 857 கி.மீ தூரம் வரை செல்லும். இந்த கார் செப்டம்பர் 2022 இல் இந்தியாவில் ரூ 1.55 கோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். EQS 580 4மேட்டிக் இரண்டு பீஎஸ்இ மோட்டார்ஸ் மற்றும் 107.8kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது 516bhp மற்றும் 855Nm டோர்க்கை உருவாக்குகிறது. 200kW சார்ஜர் மூலம் 31 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்