- மாருதி சுஸுகியின் பலேனோ இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளன
- பட்டியலில் 10 வது இடத்தில் ஹூண்டாய் வெர்னா
செப்டம்பர் 2023 இல் ஆட்டோமொபைல் துறை விற்பனையில் கணிசமான வளர்ச்சியைக் காட்டியது, இதன்மூலம் பண்டிகைக் காலத்துக்கு முன்னதாகவே புதிய சாதனை படைத்தது. மொத்தம் உள்ள 10 பதவிகளில் 6 இடங்களை மாருதி சுஸுகி கைப்பற்றியது, மீதமுள்ள நான்கு இடங்களை டாடா மற்றும் ஹூண்டாய் கைப்பற்றியது. இந்த கட்டுரையில், செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 கார்கஸை பட்டியலிட்டுளோம்.
செப்டம்பர் 2023 இல் முதல் 10 கார்ஸின் விற்பனையில் மாருதி சுஸுகி பலேனோ 18,417 யூனிட்ஸ்க்கு மேல் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்தது வேகன் ஆர், நெக்ஸான் மற்றும் பிரெஸ்ஸா, முறையே 16,250 யூனிட்ஸ், 15,235 யூனிட்ஸ் மற்றும் 15,001 யூனிட்ஸ் விற்பனை புள்ளிவிவரங்களைப் பதிவு செய்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் 14,703 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது, அதைத் தொடர்ந்து அதன் செடான் உடன்பிறப்பான டிசையர் செப்டம்பர் 2023 இல் 13,880 யூனிட்ஸை விற்பனை செய்தது. பட்டியலில் உள்ள ஒரே எம்பீவி மாருதி சுஸுகி எர்டிகா மட்டுமே, இது ஏழாவது இடத்தைப் பிடித்தது. முந்தைய மாதத்தில் 13,528 யூனிட்ஸ் விற்பனை செய்யப்பட்டன.
கடைசி மூன்று இடங்களை எஸ்யுவிஸ் கைப்பற்றியது. டாடா பஞ்ச் 13,036 யூனிட்ஸுடன் எட்டாவது இடத்திலும், க்ரெட்டா 12,717 யூனிட்ஸுடன் ஒன்பதாவது இடத்திலும், வென்யூ 12,204 யூனிட்ஸுடன் 10வது இடத்திலும் உள்ளன.
செப்டம்பர் 2023 இல் விற்பனையான டாப் 10 கார்ஸின் பட்டியல் பின்வருமாறு:
வரிசை எண் | கார் | விற்கப்பட்ட யூனிட்ஸ் |
1 | மாருதி சுஸுகி பலேனோ | 18,417 |
2 | மாருதி சுஸுகி வேகன் ஆர் | 16,250 |
3 | டாடா நெக்ஸான் | 15,235 |
4 | மாருதி சுஸுகி பிரெஸ்ஸா | 15,001 |
5 | மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் | 14,703 |
6 | மாருதி சுஸுகி டிசைர் | 13,880 |
7 | மாருதி சுஸுகி எர்டிகா | 13,528 |
8 | டாடா பஞ்ச் | 13,036 |
9 | ஹூண்டாய் க்ரெட்டா | 12,717 |
10 | ஹூண்டாய் வென்யூ | 12,204 |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்