- எக்ஸ்டரின் புக்கிங் ரூ.11,000 இல் தொடங்கப்படத்து
- இந்தியாவில் ஜூலை 10 ஆம் தேதி லான்ச் செய்யப்படும்
எக்ஸ்டரின் இன்டீரியர் படங்கள் மூலம் வெளியிட்டது
இங்குள்ள படங்களில் காணப்படுவது போல், புதிய எக்ஸ்டர் ஆனது ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் (கியா கேரன்ஸ் போன்றது) மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் டாஷ்போர்டில் ஒரு பெரிய சிங்கிள்-பீஸ் யூனிட்டைப் பெறும். மேலும், இது த்ரீ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், சென்டர் கன்சோலில் செவ்வக ஏசி வென்ட்ஸ் மற்றும் இருபுறமும் வட்ட வடிவ வென்ட்ஸ், லெதர்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் இன்டீரியர் டோர் ஹேண்டல்ஸ்க்கு பிரஷ்டு அலுமினியம் ஃபினிஷ் ஆகியவற்றைப் பெறுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் ஹிந்தியும் மொழி விருப்பமாக கிடைக்கிறது.
புதிய எக்ஸ்டர் புக்கிங் மற்றும் லான்ச் விவரங்கள்
ஹூண்டாய் இந்தியா மே மாதம் எக்ஸ்டர் பி-எஸ்யுவியை வெளியிட்டது மற்றும் மாடலுக்கான முன்பதிவுகளை ரூ.11,000 க்கு தொடங்கியது. இந்த மாடல் இந்தியாவில் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் மற்றும் சிட்ரோன் C3 மற்றும் டாடா பஞ்ச்க்கு போட்டியாக இருக்கும்.
2023 எக்ஸ்டரின் டிசைன்
எக்ஸ்டரின் டிசைனைப் பொறுத்தவரை, டாடா பஞ்ச் போட்டியாளர் H-வடிவ எல்இடி டிஆர்எல்ஸ், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், கிரில்லுக்கு மேலே உள்ள எக்ஸ்டர் எழுதுக்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ், டூயல்-டோன் அலோய் வீல்ஸ், ரூஃப் ரெயில்ஸ், ஏ-பில்லர் பொருத்தப்பட்ட ஓஆர்விஎம்ஸ், ஒரு ஷார்க்- ஃபின் ஆண்டெனா, டெயில்கேட்டில் பிளாக் நிறச் இன்சர்ட்ஸ், உயர் பொருத்தப்பட்ட ஸ்டாப் லேம்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், H-வடிவ பிரேக் லைட்ஸ் கொண்ட எல்இடி டெயில் லைட்ஸ் மற்றும் ரியர் பம்பரில் ரிஃப்ளெக்டர்ஸ்.
வரவிருக்கும் எக்ஸ்டரின் நிறங்கள் மற்றும் வேரியண்ட்ஸ்
2023 எக்ஸ்டர் ஒன்பது வண்ணங்களில் வழங்கப்படும்: அட்லஸ் ஒயிட், காஸ்மிக் ப்ளூ, ஃபைரி ரெட், ரேஞ்சர் காக்கி, ஸ்டாரி நைட், டைட்டன் க்ரே, அபிஸ் பிளாக் உடன் அட்லஸ் பிளாக், அபிஸ் பிளாக் உடன் காஸ்மிக் ப்ளூ, மற்றும் அபிஸ் பிளாக் உடன் ரேஞ்சர் காக்கி. இதில் ஏழு வேரியண்ட்ஸ் EX, EX(O), S, S(O), SX, SX(O), மற்றும் SX(O) கனெக்ட் ஆகியவை அடங்கும்.
எக்ஸ்டர் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் மூலம் 82bhp மற்றும் 114Nm டோர்க்கை உருவாக்கும், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் அல்லது ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 68bhp மற்றும் 95Nm டோர்க்கை வெளிப்படுத்தும் இது சிஎன்ஜி வேரியண்ட்ஸிலும் வழங்கப்படும். ஹூண்டாய் சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவை எக்ஸ்டரின் பிராண்ட் அம்பாசிடராக நியமித்தது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்