ஒவ்வொருவரும் தனக்கென ஒரு கார் வைத்திருக்க விரும்புகிறார்கள், ஆனால் பணவீக்கத்தைப் பார்த்து அவர்களால் அதை வாங்க முடியவில்லை. உங்கள் பட்ஜெட் 7 லட்சமாக இருந்தால், நீங்கள் ஒரு புதிய கார் வாங்க விரும்பினால், இந்த விலையில் கிடைக்கும் அத்தகைய 5 கார்ஸைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.
டாடா பஞ்ச்
பஞ்ச் எஸ்யுவி ஆனது BS6 ஃபேஸ் 2 இணக்கமான 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 82bhp மற்றும் 112Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் தயாரிப்பாளர் சிஎன்ஜி பஞ்சை ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தினார், இது வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம்.
இந்த மைக்ரோ-எஸ்யுவியில் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், ரெயின் சென்சிங் வைப்பர்ஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
டாடா அல்ட்ரோஸ்
டாடா அல்ட்ரோஸ் ஆனது 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்ஸால் இயக்கப்படுகிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டிசிஏ யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சிஎன்ஜி வெர்ஷனும் வழங்கப்படுகிறது.
சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்திய பிறகு, டாடா மோட்டார்ஸ் இப்போது அல்ட்ரோஸ் ரேஞ்சில் புதிய வேரியண்ட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. அல்ட்ரோஸின் புதிய வேரியண்ட்ஸில் டாடா வேலை செய்து வருவதாக சில வாரங்களுக்கு முன்பு தெரியவந்தது. இதன் ஆரம்ப விலை ரூ.6.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
ஸ்விஃப்ட் 1.2 லிட்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 89bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. அதேசமயம், சிஎன்ஜி வெர்ஷனில் இந்த இன்ஜின் 76bhp மற்றும் 98.5Nm டோர்க்கையும் வெளிப்படுத்தும். இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ள BS6 ஃபேஸ் 2 கட்டத்தின் கீழ் மாருதி சுஸுகி தனது அனைத்து வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை உயர்த்தியுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம். ஸ்விஃப்ட்டின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.99 லட்சம்.
மாருதி டிசையர்
BS6 2-அப்டேட் செய்யப்பட்ட 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி வேரியண்ட்ஸ் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 89bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்குகிறது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஃபைவ்-ஸ்பீட் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஎன்ஜி பயன்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 76bhp மற்றும் 98.5Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது.
மாருதி டிசையர் LXi, VXi, ZXi மற்றும் ZXi Plus ஆகிய நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.6.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாருதி பலேனோ
இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்கில் BS6 2-இணக்கமான 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸ் உள்ளது. இந்த இன்ஜின் 89bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இதை சிஎன்ஜி வேரியண்ட்ஸிலும் வாங்கலாம்.
ப்ரீமியம் ஹேட்ச்பேக் அனைத்து பயணிகளுக்கும் த்ரீ-வே சீட் பெல்ட்ஸ் மற்றும் இரண்டாவது வரிசை பயணிகளுக்கு அட்ஜஸ்ட்டெபல் ஹெட்ரெஸ்ட்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது. பலேனோவின் ஆரம்ப விலை ரூ.6.61 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்