- சுமார் இரண்டு மில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்துள்ளது
- குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் ஆலையை நிறுவலாம்
அடுத்த ஆண்டுக்குள் தனது எலக்ட்ரிக் கார்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் செய்து வருகிறது. மேலும், நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதன் உற்பத்தி ஆலைகளை அமைக்கப் போகிறது, இது ஜனவரியில் நடைபெறும் வைப்ரெட் குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்.
இந்தியாவில் தனது ஆலைகளை அமைக்க டெஸ்லா சுமார் 2 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு போன்ற நகரங்களில் இந்த உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும்.
உற்பத்திச் செலவைக் குறைக்க உள்நாட்டிலேயே பேட்டரிகளைத் தயாரிக்கவும் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவதைப் பற்றி நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது, ஆனால் அதிக கட்டணங்கள் காரணமாக அது நடக்கவில்லை. விரைவில் டெஸ்லாவுக்கும் இந்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சில பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்