- டாடா பஞ்ச் சிஎன்ஜி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
- இதற்குப் பிறகு, அப்டேடட் நெக்ஸான், சஃபாரி மற்றும் ஹேரியர் இந்திய மார்க்கெட்க்கு வரும்
வரவிருக்கும் விழாக்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டாடா மோட்டார்ஸ் செய்துள்ளது. நிறுவனம் ஆறு அப்டேடட் எஸ்யுவிஸை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. இவற்றில், இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் சிஎன்ஜி மாடலையும் புதிய இவியையும் அறிமுகப்படுத்த உள்ளது. வரவிருக்கும் மாடல்ஸ் பற்றிய முழுமையான தகவல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
டாடா பஞ்ச் சிஎன்ஜி
டாடா மோட்டார்ஸ் அல்ட்ரோஸ் மற்றும் பஞ்சின் சிஎன்ஜி பதிப்புகளை ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தியது. அல்ட்ரோஸ் சிஎன்ஜி மார்க்கெட்டில் வந்துள்ளது, மேலும் வரும் சில வாரங்களில் நிறுவனம் பஞ்ச் சிஎன்ஜியை விற்பனைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இந்த மைக்ரோ-எஸ்யுவியின் சிஎன்ஜி வேரியண்ட் பிராண்டின் ட்வின் சிலிண்டர் டெக்னாலஜியை கொண்டிருக்கும் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸுடன் வழங்கப்படும். பஞ்ச் சிஎன்ஜி புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி ஆகியவற்றுடன் போட்டியிடும்.
டாடா ஹேரியர் மற்றும் டாடா சஃபாரி லான்ச் அப்டேட்ஸ்
கடந்த சில மாதங்களாக, புதிய ஹேரியர் மற்றும் சஃபாரியின் பல ஸ்பை படங்கள் வெளிவந்துள்ளன, அதில் அவை டெஸ்டிங்கில் இருந்தது போல் காணப்பட்டது. அப்டேடட் ஹேரியர் மற்றும் சஃபாரி 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த இரண்டு அப்டேடட் மாடல்ஸின் ஸ்டைலிங் ரியர் இவியில் இருந்து எடுக்கப்படலாம். ஹேரியர் இவி போலவே, இது கனெக்டிங்க் டெயில் லைட்ஸ், புதிய எல்இடி டிஆர்எல்ஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அலோய் வீல்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேபின் ஆகியவற்றைப் பெறும்.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்
நெக்ஸான் அதன் ஃப்ரண்ட் வடிவமைப்பில் மாற்றங்களுடன் இந்த ஆண்டு மிகப்பெரிய அப்டேட்டை பெறும். ஸ்பை ஷாட்ஸில் கனெக்டிங்க் டெயில் லைட்ஸுடன் காணப்பட்டது. நெக்ஸான் புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய கியர் ஷிஃப்ட் லெவருடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் அலோய் வீல்ஸுக்கான அப்டேடட் வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறும்.
டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட்
அறிக்கைகளின்படி, நெக்ஸான்க்கு செய்யப்பட்ட வடிவமைப்பு புதுப்பிப்புகள் அதன் இவி வெர்ஷனிலும் சேர்க்கப்படும். தற்போது, நெக்ஸான் இவி ப்ரைம் மற்றும் மேக்ஸ் என இரண்டு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் முன்பு இருந்த அதே பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்ச் இவி விரைவில் அறிமுகம் ஆகுமா?
டாடாவின் பஞ்ச் இவி பல சந்தர்ப்பங்களில் ஸ்பை டெஸ்டிங்கில் காணப்பட்டது. பிராண்டின் இவி போர்ட்ஃபோலியோவில் இது நான்காவது வெர்ஷன் ஆகும். இது டிகோர் இவி’க்கு மேலே நிலைநிறுத்தப்படும். டாடா நிறுவனம் பஞ்ச் இவி அறிமுகம் குறித்து இன்னும் உறுதியான தகவலை வழங்கவில்லை என்றாலும், நிறுவனம் நிச்சயமாக இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்