- டாடா டிகோர் நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது
- ஜூன் 2023 இல் இந்த மாடலுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி உள்ளது.
டாடா டிகோர் 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் ஆனது. பல ஆண்டுகளாக, இந்த மாடல் ஆல்-எலக்ட்ரிக் வாகனமாக மாறியுள்ளது, அதே நேரத்தில் இது சிஎன்ஜியிலும் வழங்கப்படுகிறது. பெட்ரோலில் இயங்கும் டிகோர் தற்போது ரூ.6.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த என்ட்ரி-லெவெல் செடானை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிவரி பெற வாய்ப்புள்ளது.
டாடா டிகோர் வேரியண்ட்ஸ் மற்றும் வெயிட்டிங் பீரியட்
டாடா டிகோர் XE, XM, XZ மற்றும் XZ+ ஆகிய நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. தற்போது, சிஎன்ஜி ட்ரிம்ஸ் உட்பட இந்த காரின் அனைத்து வேரியண்ட்ஸ்க்கும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியடை கட்டளையிடுகின்றது. இந்த வெயிட்டிங் பீரியட் இடம், டீலர்ஷிப், நிறம் மற்றும் ஸ்டாக் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து மாறுபடலாம். மேலும் தகவலைப் பெற, அருகிலுள்ள டாடா-அங்கீகரிக்கப்பட்ட டீலரைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
டிகோர் செடானின் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்பு
இன்ஜினைப் பொறுத்தவரை, டிகோர் BS6 ஃபேஸ் 2-அப்டேடட் 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் ஃபேக்டரி பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் விருப்பத்துடன் வருகிறது. ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்ட இந்த மோட்டார், 85bhp மற்றும் 113Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. இதன் சிஎன்ஜி வெர்ஷனில், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, இன்ஜின் 72bhp மற்றும் 95Nm டோர்க்கை வெளிப்படுத்துகிறது.
இதற்கிடையில், ஜூன் 2023 இல் டாடா டிகோருக்கு ரூ.50,000 வரை தள்ளுபடியை அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள எல்லா டாடா டீலர்ஷிப்பிலும் இந்தச் சலுகைகளைப் பெறலாம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்