- ஜூலை 17, 2023 முதல் அமலுக்கு வந்தது
- லெதரெட் பேக்கின் விலையில் எந்த மாற்றமும் இல்லை
சில வாரங்களுக்கு முன்பு, டாடா மோட்டார்ஸ் 17 ஜூலை, 2023 முதல் அதன் முழு அளவிலான ஐசிஇ மற்றும் இவி மாடல்ஸில் 0.6 சதவீதம் வரை விலை உயர்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்போது, மாடல்ஸின் திருத்தப்பட்ட விலைகளை வாகன உற்பத்தியாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
டாடா டிகோர் வேரியண்ட்ஸ் மற்றும் விலை
டிகோர் நான்கு வேரியண்ட்ஸில் கிடைக்கும்: XE, XM, XZ மற்றும் XZ ப்ளஸ். அதாவது, வேரியண்ட்ஸை பொறுத்து, டாடா டிகோர் ரூ.5,000 வரை விலை உயர்ந்தது. XZ, XZ ப்ளஸ், XZ சிஎன்ஜி, XZA ப்ளஸ் மற்றும் XZ ப்ளஸ் சிஎன்ஜி விலை ரூ.4,000, XE, XZ ப்ளஸ் லெதரெட் பேக், XZ ப்ளஸ் லெதரெட் பேக் மற்றும் XZ ப்ளஸ் சிஎன்ஜி லெதரெட் பேக்கின் விலைகள் மாறாமல் இருக்கும். மீதமுள்ள வேரியண்ட்ஸ்க்கு ஒரே மாதிரியான ரூ.5,000 வரை உயர்வு.
டாடா டிகோர் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
டாடா டிகோர் 1.2 லிட்டர் த்ரீ சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 85bhp மற்றும் 113Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. 72bhp மற்றும் 95Nm டோர்க்கை உருவாக்கும் சிஎன்ஜி வேரியண்டிலும் உள்ளது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்