- சிட்டி மற்றும் ஹைவே மைலேஜ் சோதனை செய்யப்பட்டது
- இரண்டு பெடளில் ஓடும் அனுபவத்துடன் வரும் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் செடானாகும்
செக்மெண்ட் ஃபர்ஸ்ட்
டாடா தனது போட்டியை சிஎன்ஜி பிரிவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டியாகோ மற்றும் டிகோரின் சிஎன்ஜி ஏஎம்டீ உடன் தொடங்கியது. இந்த கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, நாங்கள் டியாகோ சிஎன்ஜி ஏஎம்டீ ஐ ஓட்டி அதன் மைலேஜையும் சோதித்தோம். அதேபோன்று இப்போது, நாங்கள் டிகோர் சிஎன்ஜி ஏஎம்டீ-யையும் சோதித்துள்ளோம், அதன் உண்மையான மைலேஜை இதில் வெளிப்படுத்தி உள்ளோம்.
ரியல் வேர்ல்டு மைலேஜ்
டிகோர் சிஎன்ஜி ஏஎம்டீ கிலோவுக்கு 28.06 கிமீ மைலேஜை வழங்கும் என்று டாடா அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. நாங்கள் முதலில் சிஎன்ஜி ஹேட்ச்பேக்கை 50 கிமீ தூரம் சிறந்த சிட்டி வழித்தடங்களில் ஓட்டியபோது, அது ஒரு கிலோவுக்கு 17.39 கிமீ மைலேஜை வழங்கியது. மறுபுறம், அதே காரை ஹைவேஸில் 50 கிமீ வரை ஓட்டியபோது, அது 22.10 கிமீ/கிலோ ஃப்யூல் எஃபிஷியன்சி ஐ வழங்கியது.
விவரக்குறிப்புகள்
டிகோர் சிஎன்ஜி ஏஎம்டீ ஆனது டாடாவின் 1.2-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது சிஎன்ஜி வேரியன்ட்டில் 72bhp/95Nm டோர்க்கை உருவாக்குகிறது. இது ஃபைவ்-ஸ்பீட் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டாலும், இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட்டுடனும் இருக்கலாம். இந்த இன்ஜின் பெட்ரோல் வேரியன்ட்டில் 85bhp/113Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் போது, இது ஃபைவ்-ஸ்பீட் எம்டீ அல்லது ஃபைவ்-ஸ்பீட் ஏஎம்டீ யூனிட்டிலும் பயன்படுத்தப்படலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்