- இதுதான் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்தியாவின் முதல் சிஎன்ஜி கார்ஸ் ஆகும்
- விரைவில் இந்தியாவில் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
டாடா மோட்டார்ஸ், டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜியின் புதிய வேரியன்ட்டை அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே டீஸ் செய்யப்பட்டது, இது வரும் வாரங்களில் லான்ச் செய்யப்படும். இந்த ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டை லான்ச் செய்ய நிறுவனம் தயாராகி வருகிறது.
டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி இந்தியாவில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படும் முதல் சிஎன்ஜி கார்களாக இருக்கும் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இது XT மற்றும் XZ+ வேரியன்ட்ஸுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
டாடா டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி ஆகியவை தற்போது 1.2-லிட்டர், த்ரீ சிலிண்டர், என்ஏ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளன, இது 72bhp மற்றும் 95Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இந்த இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்