- இதன் சிஎன்ஜி வேரியன்ட்டில் அதிக வெயிட்டிங் பீரியட் உள்ளது
- இப்போது இது சிஎன்ஜி ஏஎம்டீ’யில் கிடைக்கிறது
டாடா டியாகோ அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நாட்டின் பிரபலமான கார்களில் ஒன்றாக மாறியது, இதன் காம்பாக்ட் சைஸ் மற்றும் சிஎன்ஜி இன்ஜின்னே இதற்கு காரணமாகும். இதற்காக வெயிட்டிங் பீரியட் எப்போதும் அதிகமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், இந்த மாதம் இது ஒரு பெரிய அளவிற்கு குறைந்துள்ளது, அதை பற்றி இதில் விவாதிப்போம்.
தற்போது, பெட்ரோல் வேரியன்ட்ஸ்ஸை விட டியாகோவின் சிஎன்ஜி வேரியன்ட்டின் வெயிட்டிங் பீரியட் அதிகமாக உள்ளது. இருப்பினும், அதன் பெட்ரோல் வேரியன்ட்க்கு இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்டை வாங்க நினைத்தால், ஆறு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள காலம் சென்னை நகரத்திற்கு பொருந்தும், இது டீலர்,வேரியன்ட், நிறம், கியர்பாக்ஸ் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.
டாடா சமீபத்தில் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் டியாகோ சிஎன்ஜியை லான்ச் செய்தது. இது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது நிறுவனம் பொருத்திய சிஎன்ஜி கிட் மற்றும் ஃபைவ்-ஸ்பீட் ஏஎம்டீ யூனிட்டுடன் பெறலாம். இந்த இன்ஜின் 72bhp மற்றும் 95Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது, இதன் காரணமாக லிட்டருக்கு 28.06 கிமீ மைலேஜ் கிடைக்கும் என டாடா கூறுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்