•இந்த மாடல் 2022 இல் அறிமுகமானது
•2025க்குள் டாடா 10 இவி கார்களை விற்பனைக்கு கொண்டு வரும்
டாடாவின் இவி காரான டியாகோ இவி ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த மாடல் யூனிட்கள் நாடு முழுவதும் உள்ள 50,000 வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டியாகோ இவி, செப்டம்பர் 2022 இல் வெளியிடப்பட்டது, இது டாடாவின் முதல் இவி கார்களில் ஒன்றாகும். டாடாவின் எலக்ட்ரிக் வரிசையில் நெக்ஸான் இவி, டிகோர் இவி, X-Pres T, பஞ்ச் இவி மற்றும் புதிய கர்வ் இவி ஆகியவையும் அடங்கும். வரும் ஆண்டில், ஹேரியர் இவி, சஃபாரி இவி, அவின்யா மற்றும் சியேரா இவி ஆகியவையும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும்.
டியாகோ இவி ஆனது XE, XT, XZ+ மற்றும் XZ+ லக்ஸ் ஆகிய நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. மேலும் இது வாடிக்கையாளர்கள் இதை ஐந்து வண்ண விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.
டியாகோ இவி ஆனது 19.2kWh மற்றும் 24kWh என இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களைப் பெறுகிறது. இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 275 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்