- பஞ்ச் ஐசிஎன்ஜி உடன் லான்ச் செய்யப்பட்டது
- பல வேரியண்ட்ஸில் வழங்கப்படும்
டாடா பஞ்ச் ஐசிஎன்ஜி உடன், இந்திய கார் உற்பத்தியாளர் லேட்டஸ்ட் ட்வின்-சிலிண்டர் கிட்டை, டியாகோ மற்றும் டிகோர் மாடல்ஸ்க்கு புதுப்பிக்கப்பட்டது. இந்த ஐசிஎன்ஜி வேரியண்ட்டில் வரும் ஹேட்ச்பேக் மற்றும் செடானின் விலை ரூ.6.55 லட்சம் மற்றும் ரூ.7.80 லட்சம் (அனைத்து விலை எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும்.
டியாகோ மற்றும் டிகோர்ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி
இந்த புதிய அப்டேட்டின் மிகப்பெரிய சிறப்பம்சமாக புதிய ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி டெக்னாலஜி இந்தியாவில் முதலில் அல்ட்ரோஸ் சிஎன்ஜி உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, டியாகோ மற்றும் டிகோர் சிங்கிள் சிலிண்டர் சிஎன்ஜி ஆப்ஷனுடன் வந்தன, இது பூட் ஸ்பேஸில் உள்ள தாராளமான லக்கேஜ் ஏரியாவை உள்ளடக்கியது. குறிப்பிடத்தக்க வகையில், டிகோர்சிஎன்ஜி இப்போது 70 லிட்டர் டேங்க் கபாஸிட்டியைகொண்டுள்ளது, இது தொழில்துறையில் மிக உயர்ந்ததாகும்.
டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
இரண்டு மாடல்ஸும் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், மேலும் இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சிஎன்ஜி மோடில் 72bhp, 95Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது.
டியாகோ மற்றும் டிகோர் ஐசிஎன்ஜி வேரியண்ட்ஸ் மற்றும் விலை
டியாகோ ஐசிஎன்ஜி ஆனது XE, XM, XT, XZ+, XZ+ டூயல்-டோன், XT NRG, மற்றும் XZ NRG என்ற ஏழு வேரியண்ட்ஸில் வழங்கப்படும். மறுபுறம், டிகோர் சிஎன்ஜியை நான்கு வேரியண்ட்ஸ்XM, XZ, XZ+, மற்றும் XZ+ LP ஆகியவற்றில் பெறலாம்.
டாடா டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜியின் புதிய வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
டியாகோ சிஎன்ஜி வேரியண்ட்ஸ் | விலை |
XE | ரூ. 6.55 லட்சம் |
XM | ரூ. 6.90 லட்சம் |
XT | ரூ. 7.35 லட்சம் |
XZ+ | ரூ. 8.10 லட்சம் |
XZ+ டூயல்-டோன் | ரூ. 8.20 லட்சம் |
XT NRG | ரூ. 7.65 லட்சம் |
XZ NRG | ரூ. 8.10 லட்சம் |
டிகோர் சிஎன்ஜி வேரியண்ட்ஸ் | விலை |
XM | ரூ. 7.80 லட்சம் |
XZ | ரூ. 8.20 லட்சம் |
XZ+ | ரூ. 8.85 லட்சம் |
XZ+ LP | ரூ. 8.95 லட்சம் |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்