- டாடா சிஎன்ஜி போர்ட்ஃபோலியோ பஞ்ச் சிஎன்ஜியுடன் மேலும் விரிவடையும்
- டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி முதலில் ஜனவரி 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
சிஎன்ஜி டூயோவான டிகோர் மற்றும் டியாகோ ஜனவரி 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், அதே ஆண்டில், கார் தயாரிப்பாளர் டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜி வெர்ஷனையும் அறிமுகப்படுத்தினார்.
டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி நான்கு மற்றும் மூன்று வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது. அனைத்து மாடல்ஸும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் சிஎன்ஜி மோடில் 72bhp மற்றும் 95Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. BS6 ஃபேஸ் 2 மற்றும் புதிய ஆர்டிஇ விதிமுறைகளுக்கு இணங்க, அதன் முழு வரிசையின் பவர் ட்ரெயின்ஸையும் ஆட்டோமேக்கர் அப்டேட் செய்வது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், கார் தயாரிப்பாளரும் அல்ட்ரோஸ் சிஎன்ஜியை அதன் புதிய ட்வின்-சிலிண்டர் சிஎன்ஜி டெக்னாலஜியுடன் அறிமுகப்படுத்தியது, இது இடத்தின் அடிப்படையில் மிகவும் மேம்பட்ட அம்சங்களையும் நடைமுறையையும் வழங்குகிறது.
மே 26, 2023 நிலவரப்படி, டாடா சிஎன்ஜி போர்ட்ஃபோலியோவின் வேரியண்ட் வரியான எக்ஸ்-ஷோரூம் விலை பட்டியலிடப்பட்டுள்ளது:
வேரியண்ட்ஸ் | டியாகோ | டியாகோ என்ஆர்ஜி | டிகோர் | அல்ட்ரோஸ் |
XE | ரூ. 6.50 லட்சம் | - | - | ரூ. 7.55 லட்சம் |
XM | ரூ. 6.83 லட்சம் | - | ரூ. 7.70 லட்சம் | - |
XM ப்ளஸ் | - | - | - | ரூ. 8.40 லட்சம் |
XM ப்ளஸ் (S) | - | - | - | ரூ. 8.85 லட்சம் |
XT | ரூ. 7.28 லட்சம் | ரூ. 7.58 லட்சம் | - | - |
XZ | - | ரூ. 8.01 லட்சம் | ரூ. 8.11 லட்சம் | ரூ. 9.53 லட்சம் |
XZ ப்ளஸ் | ரூ. 8.01 லட்சம் | - | ரூ. 8.76 லட்சம் | - |
XZ ப்ளஸ் டூயல் டோன் | ரூ. 8.11 லட்சம் | - | - | - |
XZ ப்ளஸ் லெதர்ரெட் பேக் | - | - | ரூ. 8.90 லட்சம் | - |
XZ ப்ளஸ் (S) | - | - | - | ரூ. 10.03 லட்சம் |
XZ ப்ளஸ் O (S) | - | - | - | ரூ. 10.55 லட்சம் |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்