- கிட்டதட்ட 1.70 லட்சம் டாடா கார்கள் பைக்குகளில் சர்வீஸ் செய்யப்பட்டன
- 68% டாடா வாடிக்கையாளர்கள் டாடாவிடமிருந்து மட்டுமே சர்வீஸைப் பெற விரும்புகிறார்கள்
டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் சேல்ஸ் வரைபடம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நிறுவனத்தின் வாகனங்கள் அதிக அளவில் சாலைகளில் ஓடினால் தான் அதிகமான வாகனங்கள் தங்கள் ஓர்க்ஷாப்பில் சர்வீஸ்க்கு வரும். இந்த இந்திய கார் உற்பத்தியாளர் தனது சேவையை மேம்படுத்த, அதன் கார் சர்வீஸின் சேவைகளை குறுகிய காலத்தில் வழங்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், கஸ்டம் கேர், உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிகம், தலைவர் டிம்பிள் மேத்தாவுடன் நடந்த பிரத்யேக உரையாடலில், நிறுவனம் இப்போது டாடா கார்களுக்கு பைக்குகளின் உதவியுடன் சர்வீஸ் செய்கிறது என்பதை நாங்கள் அறிந்தோம்.
டிம்பிள் கூறுகையில், 'வாடிக்கையாளர்களின் சர்வீஸ் அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். சமீபத்தில், ஈஸிசர்வின் மூலம் வீட்டு வாசலில் சேவை வழங்கும் வசதியை நாங்கள் தொடங்கினோம். வாடிக்கையாளர்களின் நல்ல வரவேற்பால், தற்போது இந்த வசதியை விரிவுபடுத்தியுள்ளோம்.
ஈஸிசர்வின் மூலம் வீட்டு வாசலில் சர்வீஸ் கிடைக்கிறது
ஈஸிசர்வின் இந்த பிரச்சாரத்தில், நிறுவனம் இந்த நிதியாண்டில் 220 பைக்குகளின் உதவியுடன் 1.70 லட்சம் கார்களை சர்வீஸ் செய்துள்ளது. வாகனத்தை சர்வீஸ் செய்ய, டெக்னீஷியன் இரு சக்கர வாகனத்தில் பயணித்து, அடிப்படை சர்வீசிங் டூல்ஸுடன் வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கு அல்லது நியமிக்கப்பட்ட இடத்தில் போயி சேறுகின்றன. இதனால் சின்ன சின்ன வேலைகளுக்கு கூட வாடிக்கையாளர்கள் சர்வீஸ் சென்டர்க்கு வர வேண்டியதில்லை.
சர்வீஸ் ஸ்டேஷன் வெகு தொலைவில் உள்ள டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் இது பெரிதும் உதவியதாக இருக்கு என்று டிம்பிள் கூறினார். கோவிட்க்கு முன்னர் இந்நிறுவனம் நாடு முழுவதும் 570 ஓர்க்ஷாப்ஸ் கொண்டிருந்தன, தற்போது இந்த எண்ணிக்கை 929 ஓர்க்ஷாப்ஸாக உயர்ந்துள்ளது.
சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி, விரைவான சேவையை வழங்குவதன் மூலம், டாடா வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அதாவது வெளியில் செல்வதற்குப் பதிலாக நிறுவனத்திடமிருந்து சர்வீஸைப் பெறுவதற்கான விகிதம். முன்னதாக இந்த விகிதம் சுமார் 42% ஆக இருந்தது, தற்போது 68% வரை வாடிக்கையாளர்கள் தங்கள் டாடா காரை டாடா சர்வீஸ் சென்டர்களில் இருந்து மட்டுமே சர்வீஸ் செய்து வருகிறார்கள்.
சர்வீஸ் நேரத்தை குறைக்க முயற்சிக்கிறது
மேலும், டிம்பிள் கூறுகையின் படி, நிறுவனம் மேலும் செயல்திறனுக்காக சர்வீஸிங் நேரத்தை குறைக்க முயற்சிக்கிறது. ஒரு காரின் அடிப்படை சர்வீஸ்க்கு சுமார் 90 முதல் 120 நிமிடங்கள் எடுத்துக்கொள்வதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. அதுவே சர்வீஸிங் நேரத்தை குறைத்தால், ஒரு நாளில் அதிக வாகனங்கள் சர்வீஸ் செய்ய முடியும் மற்றும் வாடிக்கையாளர்கள் சர்வீஸ்க்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
தற்போது, இந்நிறுவனத்தின் மொத்தம் 11 கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு உள்ளன. இவற்றில் டாடா நெக்ஸான், டியாகோ மற்றும் டிகோர் ஆகிய மூன்று மாடல்களின் எலக்ட்ரிக் வெர்ஷனும் கிடைக்கின்றன. நிறுவனம் எதிர்காலத்தில் ஐசிஇ மற்றும் எலக்ட்ரிக்கை இணைத்து மேலும் 9 கார்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த உள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்