- இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது
- இதன் நான்கு புறத்திலும் ரெட் அக்ஸ்ன்ட்ஸ் உள்ளன
டாடா மோட்டார்ஸ் கடந்த பல ஆண்டுகளாக டார்க்/பிளாக் எடிஷன் கொண்ட எஸ்யுவிகளை வழங்கி வருகிறது. இப்போது கார் தயாரிப்பாளர் தற்போதுள்ள சஃபாரி ரெட் டார்க் எடிஷனைப் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 இல் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
டாடா சஃபாரியின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 'பிளாக் எடிஷன்' உட்பட பல வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், 'ரெட் டார்க்' எடிஷன் இந்தியா எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இன்டீரியர் எக்ஸ்டீரியரிலும் ரெட் அக்ஸ்ன்ட்ஸுடன் பிளாக் நிறத்தில் பெறுகிறது.
சஃபாரி ரெட் டார்க் எடிஷனில் ஹெட்லேம்ப் க்ளஸ்டர், பிரேக் காலிப்பர்ஸ் மற்றும் ஃப்ரண்ட் டோரில் மற்றும் டெயில்கேட்டில் சஃபாரி பேட்ஜ்களில் சிவப்பு நிற உச்சரிப்புகளைப் பெறுகிறது. மேலும், '#டார்க்' என்று முன் ஃபெண்டரில் எழுதப்பட்டுள்ளது, இது சஃபாரியின் ஸ்டாண்டர்ட் பிளாக் எடிஷனிலிருந்து வேறுபடுகிறது.
இதன் கேபின் பிளாக் எடிஷனின் ஆல்-பிளாக் தீமிலிருந்து வேறுபட்டது. சஃபாரியின் ரெட் டார்க் எடிஷன் பிரகாசமான ரெட் நிற சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டாஷ்போர்டில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தையல் மற்றும் டோர் பேடில் ரெட் அக்ஸ்ன்ட்ஸ் காணலாம்.
டாடா சஃபாரி ரெட் டார்க் எடிஷன் தற்போதைய மாடலில் உள்ள அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜினைப் பெறுகிறது, சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்