- 10 வேரியண்ட்ஸில் கிடைக்கும்
- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 16.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ரூ. 16.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் டாடா மோட்டார்ஸ் இறுதியாக சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டை லான்ச் செய்துள்ளது. இந்த மூன்று வரிசை எஸ்யுவியை ஸ்மார்ட் (O), ப்யூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர்+, அட்வென்ச்சர்+ டார்க், அகாம்ப்லிஷ்ட், அகாம்ப்லிஷ்ட் டார்க், அகாம்ப்லிஷ்ட்+ டார்க், அட்வென்ச்சர் + A, மற்றும் அகாம்ப்லிஷ்ட்+ என 10 வேரியண்ட்ஸில் பெறலாம்.
ஃபேஸ்லிஃப்டட் சஃபாரியை காஸ்மிக் கோல்டு, கேலக்டிக் சஃபயர், லூனார் ஸ்லேட், ஓபெரான் பிளாக், ஸ்டார்டஸ்ட் அஷ், ஸ்டெல்லர் ஃப்ரோஸ்ட் மற்றும் சூப்பர்நோவா காப்பர் போன்ற எக்ஸ்டீரியர் நிறங்களில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். மேலும், இதை புக் செய்த பிறகு ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியடில் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டின் டெலிவரியை பெறலாம். இதனுடன் டாடா சஃபாரியின் இரட்டையரான ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் டீலர்ஸிடம் வந்துள்ளது.
ஃபீச்சர்ஸைப் பொறுத்தவரை, அப்டேடட் சஃபாரி ஆனது 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மேலும் பல முக்கிய அம்சங்கள் இதில் பெறலாம்.
புதிய சஃபாரி 2.0-லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இவை சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்ட்டர் யூனிட்டுடன் இணைக்கப்படலாம். இந்த மோட்டார் 168bhp மற்றும் 350Nmடோர்க்கை உருவாக்கும் திறனை கொண்டது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்