- ஃபேஸ்லிஃப்ட் சஃபாரி டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல்லைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
- அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் லான்ச் டைம்லைன்
டாடா மோட்டார்ஸ் நெக்ஸான், ஹேரியர் மற்றும் சஃபாரிக்கான புதுப்பிப்புகளில் வேலை செய்து வருகிறது மற்றும் இதன் வெளியீடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்டேடட் மாடல் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் மீண்டும் காணப்பட்டது.
2024 சஃபாரி புதிய ஸ்பை ஷாட்ஸ்: அவை என்ன வெளிப்படுத்துகின்றது?
ஷாட்ஸில் காணப்படுவது போல், சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் புதிய எல்இடி டெயில் லைட்ஸைப் பெறும். டூ-பீஸ் டிசைன் மேற்கொள்ளப்படும் போது, யூனிட்ஸ் புதிய கிராஃபிக்ஸை பெறும். மற்ற இடங்களில், இது புதிய அலோய் வீல்ஸ் மற்றும் கிரில், புதிய ஹெட்லேம்ப் அமைப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட போன்னெட் டிசைன் ஆகியவற்றை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் ஃபீச்சர்ஸ்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சஃபாரி, அவின்யா கான்செப்ட்டில் இருந்து பெற்ற டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், புதிய கியர் லெவர், 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல், டிரைவ் மோட்ஸ்க்கான ரோட்டரி டயல் மற்றும் ஏசி வென்ட்ஸ்க்கான புதிய கண்ட்ரோல்ஸ் போன்ற அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் சஃபாரி இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
2024 சஃபாரி சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்ஸுடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்ட புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் கொண்டு வரலாம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்