- 2024 இல் லான்ச் செய்யபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- ஹேரியர் மற்றும் நெக்ஸான் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் உடன் காணப்படும்
2023-ஆம் ஆண்டு முதல், டாடா மோட்டார்ஸ் புதிய மாடல்ஸ் மற்றும் அதன் தற்போதைய வரிசையின் புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்தகைய ஒரு ஃபேஸ்லிஃப்ட் பெறும் மாடல் பிராண்டின் முதன்மையான எஸ்யுவி, சஃபாரி ஆகும். டாடா ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட பதிப்பை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது மற்றும் முந்தைய ஸ்பை ஷாட்ஸில் இரண்டு முக்கிய வடிவமைப்பு விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன.
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய அலோய் வீல்ஸ்
இந்த நேரத்தில், சஃபாரி புதிய அலோய் வீல்கஸுடன் காணப்பட்டது. தற்போது, எஸ்யுவியின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டில் டூயல்-டோன் 18-இன்ச் அலோய் வீல்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்பை ஷோட்ஸ், ஃபேஸ்லிஃப்ட் வீல்ஸ்க்கு புதிய ஃபைவ்-ஸ்போக் பேட்டர்னைப் பெறலாம் என்பதை வெளிப்படுத்துகிறது.
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்டீரியர்
புதிய அலோய் வீல்ஸ் தவிர, பம்பரில் பொருத்தப்பட்ட ஹெட்லேம்ப்ஸ்க்கு ஒரு நேர்த்தியான முன் க்ரில்லுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹவுசிங்யை பெறும். ஹெட் மற்றும் டெயில் லேம்ப்ஸின் வடிவமைப்பும் இந்த எஸ்யுவிக்கு ஒரு புதிய தோற்றத்தை அளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா சஃபாரி ஃபீச்சர்ஸ்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சஃபாரி மேம்படுத்தப்பட்ட ஃபீச்சர்ஸ் உடன் புதுப்பிக்கப்பட்டது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏடாஸ் அம்சங்கள் மற்றும் புதிய ரெட் டார்க் எடிஷன் ஆகியவற்ரை பெற்றது.
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின்
புதிய சஃபாரி 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் BS6 ஃபேஸ் 2 மற்றும் ஆர்டிஇ விதிமுறைகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் இந்த புதிய ஜெனரேஷன் 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்ஸையும் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தியது. இந்த எஸ்யுவி 2024 இல் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் சேர்க்கப்படலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்