- 10 வேரியண்ட்ஸில் கிடைக்கும்
- டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்டுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது
டாடா மோட்டார்ஸ் இறுதியாக இந்தியாவில் புதிய சஃபாரி ஃபேஸ்லிஃப்டை ரூ. 16.19 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. மூன்று வரிசை எஸ்யுவி ஏழு வண்ண விருப்பங்களில் 10 வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இது வரும் வாரங்களில் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்டேட்ட சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் ஸ்மார்ட் (O), ப்யூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர்+, அட்வென்ச்சர்+ டார்க், அகாம்ப்லிஷ்ட், அகாம்ப்லிஷ்ட் டார்க், அகாம்ப்லிஷ்ட்+ டார்க், அட்வென்ச்சர்+ ஏ மற்றும் அகாம்ப்லிஷ்ட்+ ஆகிய வேரியண்ட்ஸில் கிடைக்கும். வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, காஸ்மிக் கோல்டு, கேலக்டிக் சஃபயர், லூனார் ஸ்லேட், ஓபெரான் பிளாக், ஸ்டார்டஸ்ட் அஷ், ஸ்டெல்லர் ஃப்ரோஸ்ட் மற்றும் சூப்பர்நோவா காப்பர் ஆகிய ஏழு வண்ணங்களிலிருந்து வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம்.
வெளிப்புறத்தில், புதிய சஃபாரி மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்ஸ், கனெக்டெட் டிஆர்எல் அமைப்பு, ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், புதிய பாராமெட்ரிக் கிரில் மற்றும் கனெக்டிங் லைட் பார் கொண்ட எல்இடி டெயில் லேம்ப்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. மேலும், இந்த எஸ்யுவி இப்போது 19-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸில் ஏரோ இன்சர்ட்ஸுடன் வருகிறது.
அம்சங்களைப் பொறுத்தவரை, ஃபிளாக்ஷிப் டாடா எஸ்யுவி ஆனது பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், நேவிகேஷன் சிஸ்டத்துடன் கூடிய ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற அம்சங்களுடன் வருகிறது.டச் அடிப்படையிலான எச்விஏசி கண்ட்ரோல்ஸ், டூயல் ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல். வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் மூட் லைட்டிங், புதிய கியர் லெவருடன் திருத்தப்பட்ட சென்டர் கன்சோல், டிஸ்ப்ளேயுடன் கூடிய டெர்ரன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம், வென்டிலேடெட் மற்றும் பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், ரியர் டோர் சன் ஷேட்ஸ், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஏடாஸ் சூட், பவர்ட் டெயில்கேட் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்படுகின்றன.
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் அதே 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் மூலம் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஒரு ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்ட்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 168bhp பவரையும், 350Nm டோர்க்கையும் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், சஃபாரி, ஆட்டோமேட்டிக் வெர்ஷன்ஸுடன் பேடில் ஷிஃப்டர்ஸ் மற்றும் இ-ஷிஃப்டர் டெக்னாலஜியுடன் வருகிறது.
டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டின் மாறுபாடு வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
வேரியண்ட் | எக்ஸ்-ஷோரூம் விலை |
ஸ்மார்ட் எம்டீ | ரூ. 16.19 லட்சம் |
ப்யூர் எம்டீ | ரூ. 17.19 லட்சம் |
ப்யூர்+ | ரூ. 19.39 லட்சம் |
அட்வென்ச்சர் | ரூ. 20.99 லட்சம் |
அட்வென்ச்சர்+ | ரூ. 22.49 லட்சம் |
அகாம்ப்லிஷ்ட் | ரூ. 23.99 லட்சம் |
அகாம்ப்லிஷ்ட்+ | ரூ. 25.49 லட்சம் |
மேலே குறிப்பிடப்பட்டவை மேனுவல் வேரியண்ட்ஸ்க்கு மட்டுமே. மேலும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்ஸ்க்கான தொடக்க விலைகள் ரூ. 20.69 லட்சம் மற்றும் டார்க் எடிஷன்ஸின் ஆரம்ப விலை ரூ. 20.69 லட்சம் ஆகியவற்றில் வழங்கப்படும், இவை இரண்டும் ப்யூர்+, அட்வென்ச்சர்+, அகாம்ப்லிஷ்ட் மற்றும் அகாம்ப்லிஷ்ட்+ ஆகிய வேரியண்ட்ஸில் கிடைக்கும்.