- சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் அடுத்த ஆண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
- காஸ்மெட்டிக் அப்டேட்ஸ் மற்றும் கூடுதல் ஃபிச்சர்ஸை பெறலாம்
நியூ சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டின் லான்ச் மற்றும் ஸ்பை ஷாட்ஸ்
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் சஃபாரி ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து நாட்டில் டெஸ்ட் செய்து வருகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும், இந்த அப்டேடட் எஸ்யுவியின் இன்டீரியரின் புதிய ஸ்பை ஷாட்ஸ் இதில் உள்ளது.
2024 டாடா சஃபாரி இன்டீரியர் மற்றும் ஃபிச்சர்ஸ்
இங்குள்ள படங்களில் காணப்படுவது போல், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா சஃபாரியின் இன்டீரியர் கமௌபிளாஜ் செய்யப்பட்டுள்ளது. நடுவில் ஸ்கிரீனைப் பெறக்கூடிய புதிய ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், சென்டர் கன்சோலின் மேல் உள்ள கேமோவிற்குப் பின்னால் மறைந்திருக்கும் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வென்ட்ஸ்க்கான புதிய கண்ட்ரோல்ஸ், ட்வீக்ட்சென்டர் கன்சோல், டிரைவ் மோட்ஸை மாற்ற ரோட்டரி டயல், புதிய கியர் லெவர் மற்றும் கப் ஹோல்டர்ஸ் ஆகியவை தெரிகிறது. ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் பேடில் ஷிஃப்டர்ஸும் பெறலாம்.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சஃபாரியின் எக்ஸ்டீரியர் டிசைன்
புதிய கிரில், செங்குத்தாக அடுக்கப்பட்ட ஹெட்லேம்ப்ஸ், திருத்தப்பட்ட ஏர் டேம் மற்றும் ஃப்ரண்ட் பம்பர் போன்ற அம்சங்களுடன், இந்த புதிய சஃபாரி நிறைய மறுவேலை செய்யப்பட்ட ஃபேசியாவைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஸ்பை ஷாட்ஸில் புதிய அலோய் வீல்ஸ் மற்றும் புதிய போன்னெட்டை வெளிப்படுத்தியுள்ளது.
சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
2024 டாடா சஃபாரி சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜினாக இருக்கும். தற்போது 168bhp மற்றும் 350Nm டோர்க் கொண்ட இந்த மோட்டாரின் பவர் வெளியீடு மாறாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்