- இந்தியாவில் பஞ்சின் விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது
டாடா மோட்டார்ஸ் தனது பி-எஸ்யுவி பஞ்சை அக்டோபர் 2021 இல் நாட்டில் அறிமுகப்படுத்தியது, இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.49 லட்சம். தற்போது, இந்த மாடலின் விலை ரூ. 6 லட்சமாக உயர்ந்துள்ளது, இது அதன் என்ட்ரி லெவல் ப்யூர் வேரியன்ட்டாகும்.
பஞ்ச் தற்போது இந்தியாவில் மூன்று லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது. பஞ்சின் விலை அறிவிக்கப்பட்ட சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் டாடா ஒரு லட்சம் யூனிட்களைத் தாண்டியது. மே 2023 இல், இரண்டு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்து ஒரு புதிய சாதனையை எட்டியது. இந்த ஆண்டு சேலிப்ரேடரி யூனிட்டை அறிமுகம் செய்துள்ளது, இதுவே இதன் டாப் வேரியன்ட் மற்றும் ஒயிட் ரூஃப் உடன் டூயல்-டோன் டொர்னாடோ ப்ளூவில் வண்ணத்தில் வழங்கப்படுகின்றன.
டாடா பஞ்ச் தற்போது ப்யூர், அட்வென்ச்சர், அகாம்ப்லிஷ்ட் மற்றும் கிரியேட்டிவ் ஆகிய நான்கு வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இதை ஏழு வண்ண விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம். ஹூண்டாய் எக்ஸ்டருக்கு போட்டியாக இருக்கும் பஞ்ச் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, இது சிஎன்ஜி வெர்ஷனிலும் கிடைக்கிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்