- நெக்ஸானின் புதிய விலை ரூ. 8.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இல் இருந்து ஆரம்பம்
- பஞ்ச் நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
டாடா மோட்டார்ஸ் பிப்ரவரி 2024 இல் அதன் முழு கார்களின் விலையை அதிகரிக்கப் போகிறது. இந்த மாடல்களில் நெக்ஸான் மற்றும் பஞ்ச் ஆகியவை அடங்கும். இந்த இரண்டு மாடல்களின் விலை அதிகரிப்பு பற்றி இந்த கட்டுரையில் சொல்ல போகிறோம்.
டாடா நெக்ஸான்
இந்த ஃபைவ் சீட்டர் எஸ்யுவியின் விலையை டாடா மோட்டார்ஸ் ரூ. 20,000 வரை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 8.15 லட்சமாக மாறியுள்ளது. அதன் என்ட்ரி லெவல் ஸ்மார்ட் பெட்ரோல் ஃபைவ்-ஸ்பீட் எம்டீ வேரியன்ட்டின் விலை ரூ. 5,000 வரை உயர்ந்துள்ளது, மற்ற அனைத்து வேரியன்ட்ஸிலும் இப்போது ரூ. 10,000 வரை விலை உயர்ந்துள்ளது. அதன் அனைத்து டூயல்-டோன் வேரியன்ட்ஸ்க்கும் இப்போது ரூ. 20,000 வரை விலை உயர்ந்துள்ளன என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.
நெக்ஸான் ஆறு வண்ண விருப்பங்களுடன் 11 வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஏஎம்டீ மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டாட்டா பஞ்ச்
டாடாவின் பிரபலமான சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியான பஞ்சில் ரூ. 17,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது, இதன் எக்ஸ்-ஷோரூம் விலை இப்போது ரூ. 6.13 லட்சத்தில் தொடங்குகிறது. அதன் என்ட்ரி லெவல் ப்யூர் வேரியன்ட்டின் விலை ரூ. 13,000 வரை அதிகரித்துள்ளது. இருப்பினும், அதன் பெரும்பாலான வேரியன்ட்ஸின் விலை ரூ. 10,000 ஆகவும், சிஎன்ஜி வேரியன்ட்ஸின் விலை அதிகபட்சமாக ரூ.17,000 வரை அதிகரித்துள்ளது.
பஞ்ச் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது நிறுவனத்தால் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் கிடைக்கிறது. இதன் இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது.
இந்த டாடா கார்களின் வேரியான்ட்டின் மாற்றப்பட்ட விலைகளை அறிய, டாடாவின் இணையதளத்தைப் பார்வையிடுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்