- டாடா பஞ்ச் சிஎன்ஜி ஐந்து வேரியண்ட்ஸில் கிடைக்கும்
- எலக்ட்ரிக் சன்ரூஃபை பெறுகிறது
டாடா பஞ்ச் ஐசிஎன்ஜி லான்ச்
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் டாடா மோட்டார்ஸ் தனது இரண்டு சிஎன்ஜி வெர்ஷன்ஸ் அல்ட்ரோஸ் மற்றும் பஞ்ச்சை காட்சிப்படுதியாது. முந்தையது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், நிறுவனம் இப்போது பஞ்ச் சிஎன்ஜியின் விலையை அறிவித்துள்ளது, இதன் விலை ரூ. 7.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
டாடா பஞ்ச் சிஎன்ஜி இன்ஜின் விவரங்கள்
டாடா பஞ்ச் 1.2 லிட்டர் த்ரீ சிலிண்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் உடன் ஃபைவ் ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கும். பெட்ரோல் மோடில் இது 84bhp/113Nm டோர்க்கை ஜென்ரேட் செய்யும் இது, சிஎன்ஜி மோடில் 76bhp/95Nm டோர்க்கை உருவாக்கும்.
2023 பஞ்ச் ஐசிஎன்ஜி ஃபீச்சர்ஸ்
ஃபீச்சர்ஸ் பொறுத்தவரை, இதில் எலக்ட்ரிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்ஸ், ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி டேங்க், சிஎன்ஜி மோடின் டைரக்ட் ஸ்டார்ட், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 16-இன்ச் டைமண்ட்-கட் அலோய் வீல்ஸ் போன்ற அம்சங்களை பெறுகிறது.
பஞ்ச் ஐசிஎன்ஜி போட்டியாளர்
இது ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜிக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்