- பஞ்ச் இவி அடுத்த மாதம் லான்ச் செய்யப்படலாம்
- இரண்டு பேட்டரி பேக்ஸுடன் வழங்கப்படலாம்
லான்ச்க்கு முன்பே டாடாபஞ்ச்இவியின் பல ஸ்பை படங்கள் இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கின. ஐசிஇ வெர்ஷன் உடன் ஒப்பிடும்போது புதிய எலக்ட்ரிக் எடிஷன் புதிய தோற்றத்தை பெறலாம்.
படங்களின்படி, டாடா பஞ்ச் இவி ஒரு பெரிய ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது இந்த ஆண்டு நெக்ஸான்இவி’யில் அறிமுகப்படுத்தப்பட்ட 10.25 இன்ச் டிஸ்ப்ளேயாக இருக்கலாம். மேலும், இதன் இன்டீரியரில் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், புதிய ரோட்டரி டயல் கியர் செலக்டர் மற்றும் ஃப்ரண்ட் ரோ பயணிகளுக்கான ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை வழங்கப்படும். இது பேக்லிட் டாடா லோகோவுடன் புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீலையும் கொண்டிருக்கும்.
பஞ்ச் இவியின் எக்ஸ்டீரியரில் புதிய டிஆர்எல்’ஸ், ஹெட்லேம்ப்ஸ், கிரில் மற்றும் பம்பர் இருக்கும். டெஸ்ட் மாடலில் முன்புறத்தில் சார்ஜிங் போர்ட் இருப்பதாகத் தோன்றுகிறது, இருப்பினும் இது ஐசிஇவெர்ஷனைப் போன்ற ஃப்யூல் கேப்க்கு பதிலாக வழங்கப்படலாம்.
டாடா மோட்டார்ஸ் பஞ்ச் இவி’யின் பேட்டரியை விவரங்களை வெளியிடவில்லை. டியகோஇவிபோலவே, இது மீடியம் மற்றும் லாங் ரேஞ்ச் ஆப்ஷனில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்