- பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறும்
- வரும் மாதங்களில் லான்ச் ஆகும் என எதிர்பார்ப்பு உள்ளது
இந்திய மார்க்கெட்க்கான சிறந்த இவி திட்டமுடன் டாடா மோட்டார்ஸ் வேலை செய்து வருகிறது. தனது வெற்றிகரமான மாடல் ஆன நெக்ஸான் இவியுடன், இந்த ஆட்டோமேக்கர் நெக்ஸான்- அடிப்படையிலான எலக்ட்ரிக் எஸ்யுவியின் டிசைன், கூடுதல் விவரக்குறிப்புகள் மற்றும் லேட்டஸ்ட் ஃபீச்சர்ஸுடன் அப்டேட் செய்து வருகிறது. தற்போது, இந்தியாவில், இன்னொரு எலக்ட்ரிக் எஸ்யுவியை டெஸ்டிங்கில் காணப்பட்டது.
படங்களில் காணப்படுவதுபோல், பஞ்ச் இவியின் டெஸ்ட் மியூல், செங்குத்தான ஸ்லாட் உடன் புதிய பம்பர் மற்றும் கிரில், போன்னெட் லைனின் கீழ் டிஆர்எல்ஸ், மேலும் போன்னெட்டின் அகலம் முழுவதும் ஒரு லைட் பார் நீட்டிக்கப்படுவதையும் இதில் எதிர்பார்க்கிறோம். இதற்கிடையில், இந்த சப்-ஃபோர் மீட்டர் இவி, ஐசிஇ வெர்ஷனில் இருக்கும் ஸ்ப்ளிட் ஹெட்லேம்ப்ஸ் அமைப்புடன் தொடரும்.
மற்றொரு ஸ்பை படம், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் உடன் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வெளிப்படுத்துகிறது. அம்சங்களைப் பொறுத்தவரை, பஞ்ச் இவி ஆனது, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச்-அடிப்படையிலான எச்விஏசி கண்ட்ரோல்ஸ், வயர்லெஸ் சார்ஜர், புதிய கியர் செலக்டர் லெவருடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல், ப்ரீமியம் சீட் அப்ஹோல்ஸ்டரி, ஆறு ஏர்பேக்ஸ் மற்றும் இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் ட்வின்-ஸ்போக் மல்டி-ஃபங்ஷனல் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களை நெக்ஸான் இவியில் இலிருந்து வாங்கும்.
பேட்டரி பேக் மற்றும் விவரக்குறிப்புகளின் அடிப்படையில், டாடா பஞ்ச் இவி ஆனது டியாகோ மற்றும் டிகோர் இவி உடன் காணப்படும் அதே அமைப்பை மேம்படுத்தப்பட்ட செயல்திறன், ரேஞ்ச், தெர்மல்மற்றும் பவர் வெளியீடு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பஞ்ச் இவி ஆனது டியாகோ இவி மற்றும் நெக்ஸான் இவிக்கு இடையில் நிலைநிறுத்தப்படும். இது இந்தியாவில் எலக்ட்ரிக் மைக்ரோ-எஸ்யுவி பிரிவில் சிட்ரோன் eC3க்கு எதிராக போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்
சிறு பட ஆதாரம்: MotorOctane