- சோதிக்கப்பட்ட மாடல் பஞ்ச் இவி’யின் லாங் ரேஞ்ச் ஆகும்
- எம்பவர்ட் ப்ளஸ் எஸ் லாங் ரேஞ்சின் விலை ரூ. 15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ஜென்-2 கட்டிடக்கலை
டாடா பஞ்ச் இவி ஆனது இந்திய வாகன உற்பத்தியாளரின் சமீபத்திய இவி ஆகும், மேலும் சுவாரஸ்யமாக, நெக்ஸான், டியாகோ மற்றும் டிகோர் போன்ற எலக்ட்ரிக் வெர்ஷனைப் போலல்லாமல், புதிய பஞ்ச் இவி ஆனது டாடா ஜென்-2 கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது, இது காரில் அதிக இடத்தை வழங்குகிறது. மிக முக்கியமாக, பஞ்ச் இவி லாங் ரேஞ்ச் வெர்ஷன், ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 421 கிலோமீட்டர் வரை டிரைவிங் ரேஞ்சை வழங்கும் என்று டாடா நிறுவனம் கூறுகிறது. ஆனால், ரியல் வேர்ல்டு மைலேஜ் இதற்கு நேர்மாறானது. எங்கள் விரிவான ரேஞ்ச் டெஸ்ட்டில் பஞ்ச் இவி எவ்வாறு செயல்பட்டது என்பதைப் இதில் பார்ப்போம்.
டெஸ்ட் விதிமுறைகள்
எங்களின் நிலையான டெஸ்ட் புரோட்டோகாலின்படி, பஞ்ச் இவி காரை ஸ்டார்ட் செய்து ஸ்டாண்டர்ட் டிரைவ் மோடில் ஓட்டினோம். பஞ்ச் இவி’யை சிட்டி டிரைவ் மோடில் வைத்து, பிரேக்கிங் எனர்ஜி லெவலை ஒரே லெவலில் மெயின்டெயின் செய்தோம். அதைபோல், டெஸ்ட் முடியும் வரை ஏசி 21 டிகிரி முதல் 23 டிகிரி வரை செட் செய்யபட்டிருந்தது. இந்தச் சோதனையின் பெரும்பகுதியை சிட்டி எல்லைகளிளும் மற்றும் நெடுஞ்சாலையிலும் பஞ்ச் இவி’யின் சோதனையை நடத்தினோம். எல்லாவற்றையும் கருத்தில் கொண்டால், டாடா பஞ்ச் இவி ஆனது, பேட்டரி முழுவதுமாக தீர்ந்த நிலையில் 259.8 கிமீ ரியல்-வேர்ல்டு டிரைவிங் ரேஞ்சை வழங்கியது.
முழு மைலேஜ் விவரம் வெளியிடப்பட்டது
சோதனையின் மூலம் நாம் கண்டறிந்த சில முக்கியமான புள்ளிகள் பின்வருமாறு. முதலில், ஒவ்வொரு இவியும் ஸ்டார்ட் செய்யும் போது சில பேட்டரி சார்ஜை இழக்கிறது. பஞ்ச் இவி’யை பொறுத்தவரை, அதிகபட்ச வேகத்தில் இயக்கப்படும் போது 10 சதவிகிதம் பேட்டரி சார்ஜ் இழந்தது. பின்னர் மீண்டும் ஒருமுறை மணிக்கு 55 கிமீ வேகத்தை பதிவு செய்தோம். மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், காரின் பேட்டரி பேக் 7 சதவிகிதம் குறைந்தாலும், ஏசி அப்படியே உள்ளது. இறுதியாக, நாங்கள் நடத்திய சோதனையில், டாடா 421 கிமீ டிரைவிங் ரேஞ்சை தருவதாக கூறியது ஆனால் இது அதன் 61 சதவீதத்தை மட்டுமே பஞ்ச் இவி வழங்கியது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்